முகப்பு /செய்தி /உலகம் / பெற்றோர் தான் என்னை ஆயுள் முழுதும் வைத்துக் காப்பாற்ற வேண்டும், நிதியளிக்க வேண்டும்: 41 வயது வேலையில்லா பட்டாதாரி விநோத வழக்கு

பெற்றோர் தான் என்னை ஆயுள் முழுதும் வைத்துக் காப்பாற்ற வேண்டும், நிதியளிக்க வேண்டும்: 41 வயது வேலையில்லா பட்டாதாரி விநோத வழக்கு

பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த சித்திகி.

பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த சித்திகி.

தனக்கு வாழ்நாள் முழுதும் நிதி ஆதாரம் அளிக்கவும், தன்னை வைத்துக் காப்பாற்றவும் பெற்றோருக்குத்தான் அதிக கடமை உள்ளது என்று பிரிட்டனில் 41 வயது வேலையில்லாப் பட்டாதாரி ஒருவர் தாய் தந்தை மீதே வழக்கு தொடர்ந்துள்ளார். 

  • Last Updated :

தனக்கு வாழ்நாள் முழுதும் நிதி ஆதாரம் அளிக்கவும், தன்னை வைத்துக் காப்பாற்றவும் பெற்றோருக்குத்தான் அதிக கடமை உள்ளது என்று பிரிட்டனில் 41 வயது வேலையில்லாப் பட்டாதாரி ஒருவர் தாய் தந்தை மீதே வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல உடை, உணவு, பண்பாடு, கல்வியைக் கற்றுக் கொடுத்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டு குடும்பத்தையும் காப்பாற்றவே உறுதுணையாக இருப்பார்கள், வயதான பெற்றோரை வளர்ந்த வாரிசுகள் தான் காப்பாற்ற வேண்டும்.

ஆனால் பிரிட்டனில் 41 வயது வேலையில்லா ஆக்ஸ்போர்டு பட்டதாரி ஒருவர் தன்னை தன் பெற்றோர்தான் ஆயுள் முழுதும் வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று ஒரு விநோத வழக்கை கோர்ட்டில் தொடர்ந்துள்ளார்.

சித்திகி என்ற இந்த 41 வயது நபர் தன் பெற்றோரை கோர்ட்டுக்கு இழுத்து தனக்கு வாழ்நாள் முழுதும் நிதி ஆதரவு பெற்றோரே அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவர் ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார், சில சட்ட நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். ஆனால் 2011 முதல் இவர் வேலையில்லாப் பட்டாதாரியாகி விட்டார். இதனால் துபாயில் உள்ள தன் பெற்றோர் தனக்கு வாழ்நாள் முழுதும் நிதியாதரவு அளிக்க வேண்டும், அவர்கள்தான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

துபாயில் உள்ள சித்திகியின் பெற்றோர் லண்டன் ஹைட் பார்க்கில் உள்ள தங்களுக்குச் சொந்தமான வீட்டில் வாடகை கூட இல்லாமல் 1 மில்லிய பவுண்டு வீட்டில் சித்திகை தங்க, அனுபவிக்க அனுமதித்தனர்.

இதோடு மட்டுமல்லாமல் இவரது செலவுகளையும் பார்த்துக் கொண்ட பெற்றோர், வாரம் 400 பவுண்டுகளுக்கும் மேல் நிதியுதவியும் அளித்து வந்தனர்.

ஆனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படவே தற்போது சித்திகியிற்கு அளித்து வந்த நிதி ஆதரவை நிறுத்திக் கொண்டனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத சித்திகி ‘அது எப்படி’? வாழ்நாள் முழுதும் அவர்கள் எனக்குச் செய்ய கடமைப்பட்டுள்ளார்கள் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு குடும்ப கோர்ட் ஜட்ஜ் இந்த வழக்கை கிழித்துத் தூக்கி எறிந்தார். இப்போது மேல்முறையீட்டுக் கோர்ட்டிற்கு இந்த வழக்கு வந்துள்ளது.

top videos

    இந்த சித்திகி சாதாரணப் பட்ட ஆள் அல்ல, கற்றுக் கொடுத்த ஆசானான ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தனக்குச் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என்று ரூ.40.56 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த பலே கில்லாடிதான் இவர்.

    First published:

    Tags: Court Case, England, Parents