ரூ.25 லட்சம் சம்பளத்தில் இப்படியும் ஒரு வேலையா! 40,000 விண்ணப்பங்கள் குவிந்த 'World's Coolest Job'

தனது உதவியாளாருக்கு ஆஸ்திரேலிய மதிப்பில் 52,000 டாலர் ஊதியமாக வழங்கப்படும் என்று மேத்யூவ் லேப்ரே அறிவித்துள்ளார்.

news18
Updated: April 10, 2019, 5:48 PM IST
ரூ.25 லட்சம் சம்பளத்தில் இப்படியும் ஒரு வேலையா! 40,000 விண்ணப்பங்கள் குவிந்த 'World's Coolest Job'
மேத்யூவ் லேப்ரே
news18
Updated: April 10, 2019, 5:48 PM IST
ஆஸ்திரேலிய கோடிஸ்வரரான மேத்யூவ் லேப்ரே இணையத்தில் அறிவித்து இருந்த சுவரஸ்யமான வேலைக்கு இதுவரை 40,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த 26 வயதாகும் மேத்யூவ் லேப்ரே தன்னுடன் உலகம் முழுவதும் பயணம் செய்ய உதவியாளர் வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தார். 'World's Coolest Job' என்ற தலைப்பில் அந்த விளம்பரத்தை அவர் இணையத்தில் பதிவு செய்து இருந்தார்.

படிக்க... சும்மாவே இருக்க ரூ.12 லட்சம் சம்பளம்...!


தனது உதவியாளாருக்கு ஆஸ்திரேலிய மதிப்பில் 52,000 டாலர் ஊதியமாக வழங்கப்படும் என்று மேத்யூவ் லேப்ரே அறிவித்துள்ளார்.

இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம், காப்பீடு செலவீனங்கள் தனியாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் சுமார் 40000 பேர் இந்த வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் 75 சதவீத பெண்கள், 25 சதவீத ஆண்கள் ஆவார். ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதாகாவும், பெண்கள் பலர் கல்யாணம் செய்து கொள்ள ஆசை தெரிவித்துள்ளனர் என மேத்யூவ் லேப்ரே கூறியுள்ளார்.

Loading...

Also Wach: அப்பப்பா....! விர்ச்சுவல் ரியாலிட்டியில் மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்!

First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...