Home /News /international /

அழியும் உயிரினப்பட்டியலில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு!

அழியும் உயிரினப்பட்டியலில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு!

புலிகளின் மக்கள்தொகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது

புலிகளின் மக்கள்தொகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது

Tiger population: 2015 ஆம் ஆண்டின் கடைசி மதிப்பீட்டில் இருந்து புலிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) அறிவித்துள்ளது . 

2015 ஆம் ஆண்டின் கடைசி மதிப்பீட்டில் இருந்து புலிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) அறிவித்துள்ளது .

1964 இல் தொடங்கப்பட்ட இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) பூமியில் வாழும் உயிரினங்களை பட்டியலிட்டு அவை வாழும் சூழல், எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தும். அழியும் அபாயத்தில் இருக்கும் உயிரினங்களை ரெட் லிஸ்ட் எனப்படும் சிவப்பு பட்டியலில் குறிப்பிட்டு ஆண்டு தோறும் வெளியிடும்.

2022 வெளியான பட்டியலிடப்பட்ட 147,517 இனங்களில், 41,459 அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளதாக IUCN தனது சிவப்புப் பட்டியலை வெளியிட்டது. அதில் புலிகளும் அடங்கும்.

பற்றி எரிகிறது ஐரோப்பா.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஆனால் உலகளவில் புலிகளின் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்து, தற்போது உலகளவில் 3,726 முதல் 5,578 புலிகள் உள்ளன. புலிகள் கண்காணிப்பில் ஏற்பட்ட முன்னேற்றம்,அழிவின் காரணிகளை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளால் இதை நிகழ்த்த முடிந்துள்ளது என்கின்றனர்.

ஆனால் IUCN சிவப்பு பட்டியலில் புலி தொடர்ந்து இருப்பது, எண்ணிக்கை உயர்ந்தாலும் இப்போதும் அழியும் நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. IUCN இன் ‘ஒருங்கிணைந்த புலி வாழ்விட பாதுகாப்பு திட்டம்’ போன்ற திட்டங்கள் மூலம் புலி பாதுகாப்பு முயற்சிகள் தொடரும். புலியின் எண்ணிக்கையை அதிகரித்து அதை பாதுகாத்து சிவப்பு பட்டியலில் இருந்து வெளியே கொண்டுவரப்படும் என்று IUCN அறிக்கையில் தெரிவித்துள்ளது.



வேட்டையாடுதல், புலியின் இரையை வேட்டையாடுதல், வாழ்விடத்தை ஆக்கிரமித்தல், விவசாயம் மற்றும் மனித குடியேற்றம் ஆகியவை புலி இனங்கள் எதிர்கொள்ளும் சில முக்கிய சவால்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. "எவ்வாறாயினும், புலிகளின் எண்ணிக்கை மீட்பு, சிக்கலான பாதுகாப்பு சவால்களைத் தீர்ப்பது சாத்தியம். புலிகள் இன்னும் அழியும் நிலையில் இருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை நிலையானதாகவோ அல்லது அதிகரித்து வருவதாகவோ தோன்றுகிறது," டாக்டர். ஜான் பால் ரோட்ரிக்ஸ், IUCN இனங்கள் உயிர்வாழும் ஆணையத்தின் தலைவர் கூறினார்.

இந்தியாவில் புலிகளின் நிலை:

உலகளாவிய புலி எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது. 2018 புலிகள் கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக இருந்தது. வனவிலங்கு பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகையில், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி வரை 164 புலிகள் இறந்துள்ளன. இது  2020 ஆம் ஆண்டின் 111 எண்ணிக்கையை விட 48 சதவீதம் அதிகம் என்றது. பின்னர் மீண்டும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

1973 இல் 'ப்ராஜெக்ட் டைகர்' என்ற புலிகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் சங்கியாக TX2 திட்டம் 2010 இல் தொடங்கப்பட்டது, 2022 ஆம் ஆண்டளவில் உலகின் புலிகளின் எண்ணிக்கையை 6,000 ஆக இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. அதை 90% அடைந்துள்ளோம்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Tiger

அடுத்த செய்தி