"மீன்களும், ஆமைகளும் இறக்கின்றன" - தந்தையுடன் சேர்ந்து கடலை சுத்தம் செய்யும் 4 வயது சிறுமி!

Nina Gomes

சிறுமியின் தந்தை கோம்ஸ் பேசும்போது, 2017 ஆம் ஆண்டு கடல் பறவைகள், மரைன் லைஃப் குறித்து படம் ஒன்றை இயக்கியிருப்பதாக தெரிவித்தார்

  • Share this:
ரியோடி ஜெனிரோவில் உள்ள கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை தந்தையுடன் இணைந்து 4 வயது சிறுமி ஒருவர் அகற்றி வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நினா கோம்ஸ் என்ற 4 வயது சிறுமி, தந்தை கோம்ஸூடன் இணைந்து ரியோடிஜெனிரோ கடற்கரைப் பகுதிகளில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி வருகிறார். கடற்கரை பகுதிகள் மட்டுமல்லாது சிறிய படகு ஒன்றில் பயணித்து கடலுக்குள் இருக்கும் குப்பைகளையும் சேகரிக்கிறார். இதுகுறித்து பேசிய சிறுமி நினா கோம்ஸ், கடலை சுத்தப்படுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தந்தையிடம் இருந்து வந்ததாக கூறுகிறார்.

தனது தந்தை கோம்ஸ் கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் என தெரிவித்துள்ள நினா கோம்ஸ், அவற்றின் ஆரோக்கியமான வாழ்வுக்காகவும், கடலின் வளத்தை பாதுகாக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Also Read:  மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள் ஆகியவை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் வளத்தை நேரடியாக பாதிப்பதாக நினா கோம்ஸ் தெரிவித்துள்ளார். கடலில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றச் செல்லும்போது ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்கள், வலைகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்ப்பது மனதுக்கு மிகவும் வேதனையாக இருப்பதாக சிறுமி நினா கோம்ஸ் கூறியுள்ளார்.

Nina Gomes


சிறுமியின் தந்தை கோம்ஸ் பேசும்போது, 2017 ஆம் ஆண்டு கடல் பறவைகள், மரைன் லைஃப் குறித்து படம் ஒன்றை இயக்கியிருப்பதாக தெரிவித்தார். அதனை பார்த்த தனது மகளும் கடல் வளத்தை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டவளாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், 4 வயதில் கடல் பாதுகாவலராக மாறியிருப்பது இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Also Read:   மயானத்தில் 20 வருடங்களாக தனி ஆளாக பணியாற்றும் இளம் பெண்ணுக்கு இருசக்கர வாகனம் வழங்கிய இளைஞர்கள்..

கடல் சூழலியல் குறித்து பேசிய அவர், நாளுக்குநாள் கடலின் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை மீன்கள், கடல் பறவைகள், ஆமைகள் உள்ளிட்டவைகளை பாதிப்பதாக கூறியுள்ளார். மீன்களின் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் கடல் தூய்மை பணியை அவசியம் முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Nina Gomes


பல்லுயிர் பெருக்கம் குறித்து ஆய்வு நடத்தும் பிரேசிலில் உள்ள சிகோ மென்டிஸ் நிறுவனம் ரியோடி ஜெனிரோ கடல் பகுதியில் நடத்திய ஆய்வில், மீன்கள், பறவைகள், பலூட்டிகள் உள்ளிட்ட சுமார் 400 வகையான தனித்துவமான கடல்வாழ் உயிரினங்கள் அப்பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்காக கடலை சார்ந்து இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் தகவல்படி, ஆண்டொன்றுக்கு 11 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. இதனால், கடலை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சிறுமி நினா கோம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
Published by:Arun
First published: