• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • லெபனான் தூதரை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றிய 4 நாடுகள் - காரணம் என்ன?

லெபனான் தூதரை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றிய 4 நாடுகள் - காரணம் என்ன?

Lebanon

Lebanon

சவுதி அரேபியாவின் நேச நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் (UAE), குவைத் போன்ற நாடுகளும் தங்கள் நாட்டில் இருந்து லெபனான் தூதரை வெளியேற உத்தரவிட்டு 48 மணி நேரம் கெடு விதித்துள்ளன

  • Share this:
லெபனான் தூதர் தங்களை நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என சவுதி அரேபிய அரசு 48 மணி நேரம் கெடு விதித்திருக்கும் நிலையில், ஐக்கிய அரபு நாடுகள் (UAE), பஹ்ரைன் மற்றும் குவைத் அரசுகளும் தங்கள் நாட்டில் இருந்து லெபனான் தூதரை வெளியேறுமாறு கெடு விதித்துள்ளனர்.

ஏமன் மீதான சவுதி அரேபியாவின் போர் குறித்து லெபனான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஒருவர் விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் லெபனான் நாட்டுடனான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு முற்றிலும் தடை விதித்துள்ளது சவுதி அரேபியா. மேலும் லெபனான் தூதர் ஃபவ்ஸி கபாரா தங்கள் நாட்டில் இருந்து வெளியேற 48 மணி நேரம் கெடுவும் விதித்திருக்கிறது.

சவுதிக்கு ஆதரவாக 3 நாடுகள்:

இதுதவிர தங்கள் நாட்டு குடிமக்கள் லெபனான் செல்வதற்கும் தடை விதித்துள்ள சவுதி, லெபனானில் உள்ள தங்கள் நாட்டு தூதரை உடனடியாக நாடு திரும்பவும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே லெபனான் அரசு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் நிலையில் சவுதி அரேபிய அரசின் இந்த தடை லெபனானுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக மேலும் 3 நாடுகள் குதித்துள்ளன.

Also read: இவர் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகரா? யார் இந்த ஹென்ரி கேவில்?

அமைச்சர் பேச்சால் வினை:

லெபனான் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக கடந்த செப்டம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஜார்ஜ் குர்தாகி, அமைச்சரவாதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான போர் தேவையற்றது எனவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், தங்கள் நாட்டுக்கு எதிராக லெபனான் அமைச்சர் பேசியது சவுதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்தே உடனடியாக லெபனான் தூதரை வெளியேற சவுதி அரசு உத்தரவிட்டிருக்கிறது..

Also read:  பாகிஸ்தான் மேஜர் ஜெனரலின் மகனுக்கு தேசதுரோக வழக்கில் 5 ஆண்டு சிறை!

சவுதி அரேபிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து சவுதி அரேபியாவின் நேச நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் (UAE), குவைத் போன்ற நாடுகளும் தங்கள் நாட்டில் இருந்து லெபனான் தூதரை வெளியேற உத்தரவிட்டு 48 மணி நேரம் கெடு விதித்துள்ளன.

காரணம் என்ன?

சவுதி அரேபியா தலைமையிலான 10 நாடுகள் கொண்ட ராணுவ படையானது ஏமனில் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து கடந்த 6 ஆண்டுகளாக போரிட்டு வருகிறது. சவுதி அரேபியாவின் இந்த போருக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசுகளும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: