சீனாவில் நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழப்பு

கொரோனாவிலிருந்து மீண்டு எழுந்து கொண்டிருக்கும் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழப்பு
கோப்புப் படம்
  • Share this:
சீனாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு பகுதியில் யுன்னான் மாகாணத்தை மையமாகக் கொண்ட பகுதியில் நேற்றிரவு 4 புள்ளி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உயிரிழந்த நிலையில் 23 பேர் காயமடைந்தனர்.

ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.


நேற்று இரவு 9.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனாவிலிருந்து மீண்டு எழுந்து கொண்டிருக்கும் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading