39 பிணங்களுடன் எஸ்டேட்டில் மர்ம லாரி... மனித கடத்தலா? போலீஸ் விசாரணை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

39 பிணங்களுடன் எஸ்டேட்டில் மர்ம லாரி... மனித கடத்தலா? போலீஸ் விசாரணை
மர்ம கன்டெய்னர் லாரி
  • News18
  • Last Updated: October 23, 2019, 5:38 PM IST
  • Share this:
39 பிணங்களுடன் கன்டெய்னர் லாரி ஒன்று லண்டனின் முக்கிய சாலையில் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் நகரின் தொழிற்பேட்டை சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று சந்தேகத்திற்கு இடமாக வந்ததை பார்த்த போலீசார் அதனை சோதனையிட்டனர். அதில் 39 மனித உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் ‘human smuggling' என்னும் மனித உடல் கடத்தல் வியாபாரமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


லாரியை ஓட்டி வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மனித உடல்களை அடையாளம் காணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த லாரி பல்கேரியாவிலிருந்து கடந்த அக்டோபர் 19-ம் தேதி கிளம்பியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்,  மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மனித உடல் கடத்தல் என்பது மிகவும் அபாயகரமான வர்த்தகமாக வளர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கதுமேலும் பார்க்க: உஷார்: சைட் லாக்கை உடைக்காமல் பைக் திருடும் நூதன கொள்ளையர்கள்
First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்