• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழப்பு..

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழப்பு..

மியான்மர்

மியான்மர்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனைக் கண்டித்து கடந்த 4 வாரங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்கக்கோரி ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். யாங்கூன், டாவே, மாண்டலே, மியேக் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 18 பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரகள் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர். எனினும் ராணுவ அடக்குமுறைக்கு மத்தியிலும் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. யங்கூன், மாண்டலே நகரங்களில் நேற்று போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.

    கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். மோனிவாவில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன், 19 வயது இளம்பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதேபோன்று மைங்கியான் உட்பட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 38 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இதனிடையே, மியான்மரில் ராணுத்தின் சர்வதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மியான்மர் நாட்டிற்கான ஐ.நா-வின் சிறப்பு தூதர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் படிக்க... Whatsapp-க்கு மாற்றாக ஹைடெக் செயலி அறிமுகம்.. திருவண்ணாமலையில் 8-ஆம் வகுப்பு மாணவனின் அசத்தல் உருவாக்கம்..





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: