3700 ஆண்டுகள் பழமையான புராதன சின்னம் கண்டுபிடிப்பு.. கணித வரலாற்றின் முக்கிய மைல்கல்!

புராதன சின்னம்

ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, இந்த புதிய பகுப்பாய்வின் கணக்கீடுகள் மற்றும் ஹாண்ட்-டேப்லெட்டில் உள்ள வரைபடங்கள், ஒரு நில அளவைக் கணக்கிடுவதற்கு ஒரு சர்வேயரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டியுள்ளது.

 • Share this:
  ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியலாளர் 3700 ஆண்டுகள் பழமையான டேப்லெட் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இது, "ஆசிரியரின் பள்ளிப் கணித பட்டியல்" என்று முன்னர் நம்பப்பட்டது. மேலும் இந்த டேப்லெட்கள் உண்மையில் பயன்பாட்டு வடிவவியலின் பழமையான உதாரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த டேப்லெட்கள் முதலில் 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வைக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.

  மேலும் Si.427 என பெயரிடப்பட்ட இந்த டேப்லெட் முதன் முதலில் மத்திய ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வின் ஆசிரியர் டேனியல் மான்ஸ்ஃபீல்ட் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டதாவது, "டேப்லெட்டின் கண்டுபிடிப்பு மற்றும் அதன் பகுப்பாய்வு கணித வரலாற்றில் முக்கியமான தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார். இந்த ஆய்வு ஆகஸ்ட் 3ம் தேதி ஃபவுண்டேஷன் ஆப் சயின்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டது.

  also read: ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..

  ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, இந்த புதிய பகுப்பாய்வின் கணக்கீடுகள் மற்றும் ஹாண்ட்-டேப்லெட்டில் உள்ள வரைபடங்கள், ஒரு நில அளவைக் கணக்கிடுவதற்கு ஒரு சர்வேயரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டியுள்ளது. சுவாரஸ்யமாக, ஹாண்ட்-டேப்லெட், ஒரு ஸ்டைலஸைப் பயன்படுத்தி எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இப்போது நாம் அறிந்த பித்தகோரஸ் ட்ரிப்லெட்ஸ் என்ற கணிதக் கருத்தை அப்போதே பயன்படுத்தியிருப்பது ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

  பித்தகோரஸ் ட்ரிப்லெட்ஸ் ஒரு வலது கோண முக்கோணத்தின் மூன்று பக்கங்களாகும். இதில் சிறிய பக்கங்களின் சதுரங்களின் தொகை மிகப்பெரிய பக்கத்தின் சதுரத்திற்கு சமம். ஆனால், டேப்லெட்டில் பயன்படுத்தப்படும் கணக்கீடுகள் நவீன முக்கோணவியலில் நாம் பயன்படுத்தும் சைன், காஸ் மற்றும் டான் விகிதங்களை போல இல்லை. இந்த காரணத்திற்காக, ஆராய்ச்சியாளர்கள் "புரோட்டோ-ட்ரிகோனோமெட்ரி" என்ற ஒரு பெயரை டேப்லெட்டில் பயன்படுத்தப்பட்ட அமைப்புக்கு வழங்கியுள்ளனர்.

  also read: அலர்ஜி.. இந்த 23 வயது பெண் குளிப்பது எப்படி? வேதனையை வெளிப்படுத்தும் வீடியோ..

  ஆராய்ச்சியாளர் மான்ஸ்ஃபீல்ட், UNSW நார்மன் வைல்ட்பெர்கெர்-ன் சக ஊழியருடன் சேர்ந்து, பித்தோகரஸ் மும்மடங்குகளைப் பயன்படுத்தி வலது கோண முக்கோணங்களை விவரித்த அதே சகாப்தத்தின் மற்றொரு டேப்லெட்டை முன்பு பகுப்பாய்வு செய்தார்.
  மேலும் மேன்ஸ்ஃபீல்டின் கூற்றுப்படி, பித்தகோரஸ் மும்மடங்கு போன்ற சிக்கலான கணக்கீட்டு முறையைப் பற்றிய அறிவு, டேப்லெட் அமைப்பை பயன்படுத்திய சமுதாயத்தின் அதிநவீன மட்டத்தை சுட்டிக்காட்டுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, புதிய வெளிப்பாடுகள் வடிவியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
  பாபிலோனியா, பண்டைய எகிப்து மற்றும் பண்டைய கிரீஸ் உள்ளிட்ட பல பழங்கால நாகரிகங்களைத் தவிர, சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆரம்ப வடிவவியலின் தோற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை அறியப்பட்டவற்றின் படி, வடிவவியலின் ஆரம்ப சான்றுகள் கிமு 3000 வரை பழமையானவை.
  Published by:Arun
  First published: