மாசுபாடுகளை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்த 35 ஆயிரம் பள்ளி மாணவர்கள்!

ஐரோப்பாவிலேயே சமீப காலத்தில் மிகப்பெரும் அளவில் நடந்த மாணவர்கள் போராட்டம் இதுதான்

மாசுபாடுகளை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்த 35 ஆயிரம் பள்ளி மாணவர்கள்!
பெல்ஜியம் மாணவர்கள்
  • News18
  • Last Updated: January 25, 2019, 1:12 PM IST
  • Share this:
பெல்ஜியம் நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசின் நடவடிக்கை வேண்டியும் தலைநகர் ப்ரூசெல்ஸ் பகுதியில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 35 ஆயிரம் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

பெல்ஜியம் பள்ளி மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் உலக வெப்பமயமாதல், மாசுபாடு, மனிதனால் உருவான காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

பதாதகைகள் ஏந்தியும் மத்தளம் அடித்தும் போராட்டத்தில் மாணவர்கள் பங்கெடுத்தனர். ஐரோப்பாவிலேயே சமீப காலத்தில் மிகப்பெரும் அளவில் நடந்த மாணவர்கள் போராட்டம் இதுதான் என பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் வரையில் இனி வாரம் ஒருமுறை பள்ளி வகுப்புகளைப் புறக்கணித்து இதுபோல் பிரம்மாண்ட போராட்டப் பேரணியில் ஈடுபடப் போவதாகவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க: 10.50 லட்சம் பேருக்கு வேலை... உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் அறிவிப்பு
First published: January 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்