சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் வெளிநாட்டவர்கள் 35 பேர் உயிரிழப்பு...!

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் வெளிநாட்டவர்கள் 35 பேர் உயிரிழப்பு...!
விபத்து
  • News18
  • Last Updated: October 17, 2019, 8:59 AM IST
  • Share this:
சவுதி அரேபியாவின் மதினா மாகாணத்தில் நேற்று இரவு நடந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டவர்கள் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஆசியா மற்றும் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.

சவுதி அரேபியாவின் மதினா மாகாணத்தில் உள்ள அல் அக்தல் என்ற பகுதியில், நேற்று பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் கனரக வாகனம் ஒன்றுடன் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் ஆசிய மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.


மெக்கா மற்றும் மதினா யாத்திரைக்காக அவர்கள் வந்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்