தன்னை தானே திருமணம் செய்துகொண்ட 32 வயது பெண்

news18
Updated: October 11, 2018, 8:48 PM IST
தன்னை தானே திருமணம் செய்துகொண்ட 32 வயது பெண்
லுலு ஜெமிமா
news18
Updated: October 11, 2018, 8:48 PM IST
திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக உகாண்டாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார்.

உகாண்டாவைச் சேர்ந்த லுலு ஜெமிமா (32) லண்டனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், லுலு ஜெமிமாவிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு அவரது பெற்றோர் பல ஆண்டுகளாக வற்புறுத்தியுள்ளனர்.

பல்வேறு காரணங்களுக்காக திருமணத்தை தவிர்த்து வந்த லுலு, கடைசியாக திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதித்தார். ஆனால், ஒரே வித்தியாசம் இத்திருமணத்தில் மணமகனே கிடையாது.

இதுகுறித்து, இங்கிலாந்தில் வெளியாகும் டெய்லி மெயில் என்னும் நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி லுலு ஜெமிமா தனது 32-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதே நாளில், அவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார். இத்திருமணம், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்றது. எனினும் இதில் அவரது பெற்றோர் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து லுலு ஜெமிமா கூறுகையில், ``எப்போது திருமணம் செய்துகொள்வாய் என்று என்னை பலரும் நச்சரித்து வந்தனர். எனக்கு படிப்பு தான் முக்கியம். மேலும், வாழ்நாள் முழுவதும் என்னை நன்றாக கவனித்துக் கொள்ள கூடிய நபரை திருமணம் செய்ய நினைத்தேன், அதனால், நான் என்னையே திருமணம் செய்துகொண்டேன்’ என்றார்.

பிறர் அளிக்கும் நன்கொடை மூலம் படித்து வரும் லுலு ஜெமிமா, அவரது திருமணத்துக்கு செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 2 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.198). இந்த தொகையும், அவர் வீட்டிலிருந்து திருமணம் நடந்த இடத்துக்கு வாடகை காரில் வந்ததற்காக ஆன செலவாம்.

திருமணத்தின்போது லுலு ஜெமிமா அணிந்த ஆடை அவரது நண்பர் பரிசாக கொடுத்ததாம். திருமணத்தில் வெட்டப்பட்ட கேக்கை அவரது சகோதரர் வாங்கித் தந்துள்ளார். திருமணத்தில் பங்கேற்றவர்கள் அவரவர்கள் சாப்பிட்ட செலவை அவரவர்களே ஏற்றுக்கொண்டனர்.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...