3,000 கிலோ குப்பை... எவரெஸ்ட் சிகரத்தை சுத்தப்படுத்திய தூய்மை நேபாளம் இயக்கம்!

உலகின் உயரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

3,000 கிலோ குப்பை... எவரெஸ்ட் சிகரத்தை சுத்தப்படுத்திய தூய்மை நேபாளம் இயக்கம்!
எவரெஸ்ட் (File Photo/ Reuters)
  • News18
  • Last Updated: April 29, 2019, 4:42 PM IST
  • Share this:
நேபாள தூய்மை இயக்கத்தின் சார்பில் எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் பணியில் சுமார் 3 ஆயிரம் கிலோ கணக்கில் குப்பை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் வகையில் நேபாளம் சார்பில் தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டது. உலகின் உயரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. நேபாளம் புத்தாண்டை முன்னிட்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த இயக்கப் பணிகள் குறித்து நேபாளத்தின் இயக்குநர் ஜெனரல் தண்டு ராஜ் கிம்மைர் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் சுமார் 3,000 கிலோ குப்பை வரையில் எவரெஸ்ட் சிகரத்திலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் இந்தக் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.


அரசு ஊழியர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர். பணியில் ஈடுபட்டோருக்குத் தேவையான தண்ணீர், சாப்பாடு, இருப்பிடம் என அனைத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: குண்டு வெடிப்பு குறித்து இந்தியா முன்னதாகவே தகவல் கொடுத்தது! - மகிந்த ராஜபக்ச
First published: April 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading