முகப்பு /செய்தி /உலகம் / சுனாமி போல் 300 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத மணல் புயல் - பேரதிர்ச்சியில் மக்கள்!

சுனாமி போல் 300 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத மணல் புயல் - பேரதிர்ச்சியில் மக்கள்!

மணல் புயல்

மணல் புயல்

கோபி பாலைவனத்திற்கு அருகாமையில் இருக்கும் டன்ஹூவாங்க் நகரம் மிகக் கடுமையான கால நிலை நிலவும் இடமாக இருந்து வருகிறது

  • Last Updated :

சீனாவில் திடீரென 300 அடி உயரத்துக்கு எழுந்த மணற் புயலால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

சீனாவின் கான்சு மாகாணத்துக்குட்பட்ட டன்ஹூவாங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி அளவில் திடீரென மணற் புயல் ஏற்பட்டது. சுமார் 300 அடிக்கு மேல் எழுந்த மணற் புயல் அந்த நகரத்தையே மூழ்கடித்தது. எங்கு பார்த்தாலும் மணல் மையமாக காட்சியளித்தது. கட்டிடங்கள் மணலால் மூடப்பட்டதுடன் சுமார் 20 அடி தூரம் வரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த மணற் புயலை மக்கள் பலரும் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். வீடியோவில் பார்க்கும் காட்சிகள் ஒவ்வொருவரையும் பதைபதைக்கச் செய்கிறது.

https://twitter.com/BeingFarhad/status/1419326024848867335?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1419326024848867335%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2F300-feet-high-sandstorm-engulfs-dunhuang-in-northwest-china-watch-viral-video-4012400.html

அருகில் உள்ள கோபி பாலை வனத்தில் உருவாகிய மணற்புயல் டன்ஹூவாங் நகரம் வரை பரவியுள்ளது. உடனடியாக இது குறித்து தகவல் அறித்த உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகள், அப்பகுதி சாலைகளை தற்காலிகமாக மூடினர். மணற் புயல் தாக்கிக்கொண்டிருக்கும்போது சாலையில் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என்பதால் முன்னெச்சரிக்கையாக சாலைகளை மூடினர். மணற் புயலில் சிக்கிய வாகனங்கள் வேறு வாகனங்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்வதற்கும் காவல்துறையினர் உதவினர். மணற் புயலினால் காயங்கள் மற்றும் பாதிப்புகள் என எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் அந்தப் பகுதியில் காற்றின் தரம் மிக மிக மோசமாக இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=4oMumw-5EJU

கோபி பாலைவனத்திற்கு அருகாமையில் இருக்கும் டன்ஹூவாங்க் நகரம் மிகக் கடுமையான கால நிலை நிலவும் இடமாக இருந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற மாங்கோ குகைகள் அங்கு அமைந்துள்ளன. உலகின் பழமையான வரலாற்றுச் சின்னமாக அதனை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. மணற் புயல், சீனாவைப் பொறுத்தவரை புதிதானதல்ல. ஏற்கனவே முக்கிய நகரங்கள் எதிர்பாராத நேரங்களில் மணற் புயலில் சிக்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய நகரமாக கருதப்படும் பெய்ஜிங் நகரத்தை மணற் புயல் தாக்கியது.

Also Read: நடைபயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி கார் ஏற்றி கொலை: சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி - உச்ச நீதிமன்றம் தலையீடு

அப்போது ஏறத்தாழ 12 மாகாணங்கள் மணற்புயலால் பாதிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மணற் புயலில் பெய்ஜிங்கை தாக்கிய மணற்புயல் மிக மோசமானது என நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த புயலுக்குப் பிறகு பெய்ஜிங் நகரின் காற்றின் தரம் மிகவும் மோசமானது. இன்னும் இதே நிலையை நீடித்து வருகிறது. பெய்ஜிங்கை தாக்கிய அந்த மணற் புயல் மங்கோலியாவில் உருவானதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். இத்தகைய மணற் புயல்களில் இருந்து தப்பிக்க கிரீன் வால் என்ற திட்டத்தை சீன அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், மணற் புயலை தடுக்கும் நோக்கில் முக்கிய நகரங்களில் மரம் நடுதலை செய்து வருகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: China, Sand, Storm, Tsunami, Viral Videos