முகப்பு /செய்தி /உலகம் / 2030-ல் சுமார் 30.5 கோடி ஆப்பிரிக்க குழந்தைகள் மிக மோசமான வறுமையில் வாழப்போகும் அபாயம்

2030-ல் சுமார் 30.5 கோடி ஆப்பிரிக்க குழந்தைகள் மிக மோசமான வறுமையில் வாழப்போகும் அபாயம்

வறுமையில் குழந்தைகள்

வறுமையில் குழந்தைகள்

  • 1-MIN READ
  • Last Updated :

2030-ல் ஆப்பிரிக்காவில் சுமார் 30.5 கோடி குழந்தைகள் மிக மோசமான வறுமையில் வாழ்வார்கள் என்று ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது.

ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் அல்லது 30.5 கோடி குழந்தைகள் 2030-ம் ஆண்டில் கொடிய வறுமையில் வாழ்வார்கள் என்று 'ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்' தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை 2000-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை ஒப்பிட்டால், மூன்று மடங்கு அதிகம். கடந்த ஆண்டு ஐநா அறிக்கையின் படி வறுமையில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக இருந்தது.

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் எதன் காரணமாக குழந்தைகள் வறுமையில் இருக்கிறார்கள் என்பதை ஐநா பட்டியலிட்டுள்ளது. சுத்தமான தண்ணீர் போதிய அளவு கிடைப்பதில்லை; ஏற்றத்தாழ்வான பொருளாதாரம்; குறைந்த அளவு வருமானம் போன்ற காரணங்களை அடுக்குகிறது ஐநா.

ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் வறுமை மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. சில நாட்டு அரசுகள் மட்டும் இதைச் சரியாகப் புரிந்துகொண்டு, தங்கள் நாட்டு கொள்கைகளில் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன. வறுமை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று, குழந்தைகள் வறுமையில் இருப்பதை முற்றிலும் ஒழித்தே தீரவேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் இருக்கின்றன.

First published:

Tags: Poverty