கையெறி குண்டை வைத்து விளையாடிய 3 குழந்தைகள் பலி: பாகிஸ்தானில் பயங்கரம்

மாதிரிப்படம்.

குவெட்டா நகரின் அக்ராட் அபாட் என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த கையெறி குண்டு வெடித்தது என்கிறார் போலீஸ் அதிகாரி ஹிதாயத்துல்லா. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 • Share this:
  பாகிஸ்தானில் விளையாட்டுப் பந்து என நினைத்து கையெறி குண்டை எடுத்து விளையாடிய மூன்று குழந்தைகள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

  பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடந்த இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கையெறி குண்டை பந்து என நினைத்த 10-14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தூக்கி எறிந்து விளையாடியதில் குண்டு வெடித்துள்ளது.

  ஆப்கானிஸ்தானில் இருந்து கையெறி குண்டுகள் பாகிஸ்தானுக்கு கள்ளசந்தை மூலமாக வருகின்றன. இவற்றை விளையாட்டுப் பொருட்கள் என நினைத்து விளையாடி இதுவரை பல பாகிஸ்தான் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை பாகிஸ்தான் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

  Also Read: சீனாவில் ஓராண்டாக ஊருக்குள் சுற்றித்திரியும் 15 யானைகள் - 1 மில்லியன் டாலர் சேதம்!

  கையேறி குண்டை யார் குடியிருப்புப் பகுதியில் விட்டுச் சென்றது என்று தெரியவில்லை என்கின்றனர் போலீசார்.

  குவெட்டா நகரின் அக்ராட் அபாட் என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த கையெறி குண்டு வெடித்தது என்கிறார் போலீஸ் அதிகாரி ஹிதாயத்துல்லா. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதி எப்போதும் வன்முறைகளும் கலவரங்களும், குண்டுவெடிப்புகளும் நிகழும் பகுதியாகும். ராணுவத்தினர் மீது பிரிவினைவாதிகள் இங்கு கையெறி குண்டுகளை வீசுவதும் தற்கொலை தாக்குதல் நடத்துவதும் சகஜம். பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து செல்ல பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து இங்கு பாகிஸ்தான் தாலிபான்கள் மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதத்தின் கையும் இப்பகுதியில் ஓங்கியுள்ளது.

  Also Read: மெக்சிகோவில் விளைநிலத்தில் பூமி உள்வாங்கி பெரிய பள்ளம்: பீதியடைந்த மக்கள்

  இதனால் இங்கு நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் ஏதோ குடிசைத் தொழில் போல் நடந்து வருகின்றனர். குழந்தைகள் பலர் இதில் சிக்குகின்றனர் என்று சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப் வலியுறுத்திவருகிறது.
  Published by:Muthukumar
  First published: