Home /News /international /

‘அதீத அழகாக இருப்பதால் கைது செய்யப்பட்டேன்’: லாஸ் வேகாஸில் குழப்பிய இளம்பெண்

‘அதீத அழகாக இருப்பதால் கைது செய்யப்பட்டேன்’: லாஸ் வேகாஸில் குழப்பிய இளம்பெண்

கைது செய்யப்பட்ட பிறகு, தன்னைப் போல அழகான பெண்ணை யாரையும் அதிகாரிகள் பார்த்ததில்லை என்பதால் தான் துன்புறுத்தப்படுவதாக அந்தப் பெண் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில், கட்டணத்தைச் செலுத்தாமல், விமான நிலைய விதிகளை மீறி உணவகத்திலிருந்து வெளியேறிய பெண் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், 28 வயதான அவர் மிகவும் அழகாக இருப்பதால் தான் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது அனைவரிடத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லாஸ் வேகாஸ் பெருநகர காவல்துறை சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டபோது அவர்களால் ஹென்ட் புஸ்டாமி என்ற அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எவ்வாறாயினும், ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகளால் பின்னர் காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தேடும் பெண்ணுடன் பொருந்தக்கூடிய ஒரு பெண்ணைக் கண்டதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர், போலீசார் இறுதியாக 28 வயதான பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அங்கு அந்தப் பெண் அதிகாரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.

    உணவகத்தில் இருந்து வெளியேறியதற்காக போலீசார் அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்தபோது, ​​​​அந்த அதிகாரிகள் ‘அவரைப் போல அழகான யாரையும் பார்த்ததில்லை’ என்று கூறி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புஸ்டாமி கூறினார். போலீசார் அப்பெண்ணை கைது செய்தபோது, ​​​​அந்த பெண், ‘அனைத்து அதிகாரிகள் மீதும் உமிழ்நீரால் தாக்கப்போவதாகவும், அதிகாரிகள் வக்கிரமானவர்கள் என்றும், அவர்கள் அழகாக யாரையும் பார்க்காததால், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும்’ அந்தப் பெண் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர், விமான நிலைய நடத்தையை மீறியதற்காக அப்பெண் கைது செய்யப்பட்டு 1,000 அமெரிக்க டாலர் பிணையில் கிளார்க் கவுண்டி தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார்.
    Published by:Archana R
    First published:

    Tags: America, Woman

    அடுத்த செய்தி