ஜெர்மனியில் சேர்ந்த 23 வயதான மாடல் அழகி ஷஹ்ரபான் கே இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி பிரபலமானவர். ஈராக்கை பூர்வீகமாகக் கொண்ட ஷஹ்ரபானுக்கு ஏற்கனவே திருமணமாக விவாகரத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவர் ஷேகிர் என்ற 24 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஷஹ்ரபான் தனது முன்னாள் கணவரை பார்க்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றநிலையில் அவர் வீடு திரும்பவில்லை. திடீரென பெண் மாயமான நிலையில், இது குறித்து அவரின் குடும்பத்தார் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.அதன் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து தொலைவான இடத்தில் மாயமான ஷஹ்ரபானின் காரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த காருக்குள் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்துள்ளார். அந்த சடலம் அச்சு அசலாக ஷஹ்ரபானின் தோற்றத்திலேயே இருந்துள்ளாதால் உயிரிழந்தது நமது மகள் தான் என ஷஹ்ரபானின் பெற்றோர் நம்பியுள்ளனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது தான் அந்த உடல் ஷஹ்ரபானின் உடல் இல்லை என்ற உண்மை தெரியவந்தது.இதனால் போலீசாரும், பெற்றோரும் குழம்பிப் போன நிலையில், போலீஸ் நடத்திய புலன் விசாரணையில் உண்மை அம்பலமானது.
அந்த உடல் ஷஹ்ரபான் இல்லை என்றால் யார் அது என்பதை முதலில் போலீஸ் விசாரித்தனர். அப்போது தான் உயிரிழந்ததும் ஒரு மாடல் அழகி தான். அவர் பெயர் கதீட்ஜா வயது 23 என்ற விவரம் தெரியவந்தது. இவரின் உடல் ஷஹ்ரபானின் காருக்குள் ஏன் வந்தது, மாயமான பெண் என்ன ஆனார் என 6 மாதங்களாக பல கோணங்களில் போலீஸ் விசாரிக்க இறுதியில் தான் இந்த கொலையே ஷஹ்ரபான் போட்ட நாடகம் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.
இதையும் படிங்க: காதலர் தினத்துக்கு காண்டம் இலவசம்.. ஆணுறைகளை அள்ளிக்கொடுக்கும் தாய்லாந்து அரசு!
ஷஹ்ரபான் தனது குடும்ப பிரச்சனைகளில் இருந்து தப்பித்து காதலனுடன் உல்லாசமாக வாழ சதித்திட்டம் தீட்டியுள்ளாார். அதன் பேரில் தான் இறந்து விட்டதாக நாடகமாடி, பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் நம்ப வைக்க வேண்டும் என திட்டமிட்டு தன்னை போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை தேடியுள்ளார். இதற்காக இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்கை பயன்படுத்தி பெண்களுக்கு வலை வீசியுள்ளார். அப்போது தான் ஷஹ்ரபான் வீட்டில் இருந்து 100 மைல் தூரத்தில் வசிக்கும் கதீட்ஜா என்ற 23 பெண் ஷஹ்ரபானின் வலையில் மாட்டினார்.
தனது உடல் தோற்றம் போலவே கதீட்ஜா இருப்பதை உறுதி செய்து கொண்ட ஷஹ்ரபான், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கில் இருந்து சகஜமாக பேசி நட்பை வளர்த்துள்ளார். அடிக்கடி அழகு சாதனை பொருள்களை வாங்கி கதீட்ஜாவுக்கு அனுப்பியுள்ளார்.பின்னர் ஒரு நாள் அழகு சாதன பொருள்களை நேரில் தருவதாக கூறி கதீட்ஜாவுக்கு அழைப்பு விடுத்துள்ளர். கதீட்ஜாவும் அதற்கு சம்மதம் தரவே,ஷஹ்ரபானும் அவரது காதலர் ஷேகீரும் கதீட்ஜாவை காரில் ஏற்றிக்கொண்டு ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கதீட்ஜாவின் முகத்தில் மட்டும் 50 கத்தியால் கொடூரமாக குத்தி முகத்தை சிதைத்துள்ளனர்.
பின்னர் உடலை காரில் கிடத்தி வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து 6 மாத காலம் போலி கொலை நாடகமாடி ஷஹ்ரபான் தனது காதலர் ஷேகீருடன் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அதிபயங்கரமான சதித் திட்டம் தீட்டி கொலை செய்த ஜோடியை ஜெர்மனி காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Germany, Murder