ஹோம் /நியூஸ் /உலகம் /

சுழன்று அடிக்கும் அதிவேக காற்று... பனிப்புயல் குளிரில் 22 பேர் உயிரிழப்பு.. மிரண்டு நிற்கும் அமெரிக்கா!

சுழன்று அடிக்கும் அதிவேக காற்று... பனிப்புயல் குளிரில் 22 பேர் உயிரிழப்பு.. மிரண்டு நிற்கும் அமெரிக்கா!

பனிப்புயல்

பனிப்புயல்

புயல் காரணமாக நியூயார்க்கின் பஃபேலோ (buffalo) பகுதியில் மட்டும் 2 அடி உயரத்துக்கு பனி தேங்கிக்கிடக்கிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அமெரிக்காவை தாக்கியுள்ள பாம் சூறாவளியால் பெரும்பாலான மாகாணங்களில்  கடுமையான குளிர் நிலவி வருகிறது.  தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் இந்த  மோசமான பனிப்புயல் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது.

இது மேலும் குறைந்து - 60 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.  நூறாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வழக்கங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த வருடம்  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பதற்கு சாத்தியம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

புயல் காரணமாக நியூயார்க்கின் பஃபேலோ (buffalo) பகுதியில் மட்டும் 2 அடி உயரத்துக்கு பனி தேங்கிக்கிடக்கிறது. இதனால் அவசரகால நடவடிக்கை முயற்சிகள் கூட இங்கே முடங்கியது.

அமெரிக்காவில் செவ்வாய் கிரகத்திற்கு இணையான கடுங்குளிர் நிலவுவதால் மக்கள் திணறல்!

அமெரிக்காவில் சூழ்ந்துள்ள எலும்பை உறைய வைக்கும் குளிரை சமாளிக்க முடியாமல் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

கார்கள் செயலிழப்பு, தொடர் விபத்துகளோடு மின்சாரமின்றியும் மக்கள் தவித்து வருகின்றனர். மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வீடுகளில் குளிரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்


First published:

Tags: Cold winds, Strom, USA