ஹோம் /நியூஸ் /உலகம் /

Nobel Prize : 2022 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு!

Nobel Prize : 2022 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு!

ஸ்வாண்டே பாபோ

ஸ்வாண்டே பாபோ

Svante Paabo: இந்த ஆண்டுகான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, Indiaswedanswedanswedan

  ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுகான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.

  மனிதன் எங்கிருந்து வந்தான்? நமக்கு முன்னால் தோன்றிய மனிதனுக்கும் தற்போது பரிணாம மாற்றம் அடைந்த மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கோணத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்துள்ளார் ஸ்வாண்டே பாபோ.

  ஹோமினின் என்று அழைக்கப்படும் அழிந்து போன முந்தைய காலத்து மனித இனத்தைப் பற்றி சாத்தியமற்ற கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது மனித இனத்திற்கு நெருங்கிய தொடர்புடைய நியாண்டர்தால் (Neanderthal) என்ற அழிந்துபோன இனத்தின் மரபணுவை இவர் வரிசைப்படுத்தியுள்ளார்.

  மேலும் டெனிசோவா என்ற ஹோமினின்கள் பற்றி உலகிற்குக் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார். இவரின் ஆராய்ச்சியில் முக்கியமாக மனித கண்டுபிடிப்பில் பெரிய அச்சாணியாகத் திகழக் கூடிய மரபணு பரிமாற்றத்தைப் பற்றிக் கண்டுபிடித்துள்ளார்.

  அழிந்துபோன ஹோமினின்கள் முதல் தொடங்கி 70,000 ஆண்டுகள் முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த ஹோமோ சேபியன்ஸ் வரை உள்ளவற்றின் மரபணு மாற்றத்தை இவர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்துள்ளார்.

  இவரின் இந்த ஆராய்ச்சி, அறிவியல் ஆராய்ச்சியில் புதிய வடிவத்தைத் தோற்று வித்துள்ளது. மனித பரிமாற்றத்தில் இருக்கும் மரபணுக்கள் வேற்றுமையைக் கண்டுபிடிப்பதன் மூலம் இதர உயிரினங்களைக் காட்டிலும் மனிதன் தனித்துவம் அடைந்தவன் என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது.

  நியாண்டர்தால்கள் டிஎன்ஏ மாதிரிகளை வைத்து இவர் நடத்திய ஆராய்ச்சி மூலம் மரபணு வேறுபாடுகளைக் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆராய்ச்சி மனிதன் எங்கிருந்து தோன்றினான் என்று கேள்விக்கு ஒரு சரியான பாதையைத் தோற்றுவித்துள்ளது.

  Also Read : சீனாவிற்கு எதிராகத் திரும்பிய நாடுகள் - ராணுவ பலத்தை ஒன்றிணைக்க ஒப்பந்தம்!

  மேலும் 2008 ஆம் ஆண்டு ஸ்வாண்டே பாபோ, சைபீரியாவின் தெற்குப் பகுதியில் டெனிசோவா என்ற குகையில், இவர் 40,000 வருடம் பழைமை வாய்ந்த கை எலும்பில் இருந்து எடுத்து டிஎன்ஏ மூலம் அழிந்துபோன ஹோமினின்கள் என்ற இனத்தைப் பற்றி கண்டுப்பித்துள்ளார். ஹோமினின்களை டெனிசோவா என்று அழைக்கின்றனர். இது ஒரு புதிய இனத்தையே உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

  மனித வரலாற்றில் முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பாக இவர் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பிற்காக இவருக்கு இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Nobel prize, Nobel Prize For Medicine