ஹோம் /நியூஸ் /உலகம் /

நல்லதை செய்யாமல் கிறிஸ்துமஸை கடந்து செல்ல வேண்டாம் - போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்!

நல்லதை செய்யாமல் கிறிஸ்துமஸை கடந்து செல்ல வேண்டாம் - போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்!

கிறிஸ்துமஸ் விழாவில் போப் பிரான்சிஸ்

கிறிஸ்துமஸ் விழாவில் போப் பிரான்சிஸ்

வாடிகனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் நல்லதை செய்யாமல் இந்த கிறிஸ்துமஸை கடந்து செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • intern, IndiaVaticanVatican

இயேசு பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதியை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் புனித நாளாக கருதி கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டுவருகின்றனர். எனவே, இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை இடமாக வாடிகன் கருதப்படுகிறது.

இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸில் தலைமையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சக்கர நாற்காலியில் வந்த போப் பிரான்ஸிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 7ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கூடியிருந்த அரங்கில், குழந்தை இயேசுவின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

சிறப்பு பாடல்கள் பாடி, அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர், விழாவில் பேசிய போப், மனிதர்கள் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் தங்கள் சகோதர சகோதரிகள், உற்றார்களை கூட சுரண்ட பார்க்கின்றனர். எத்தனை போர்களை மனிதர்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். இன்று கூட பல இடங்களில் பல்வேறு இடங்களில் மனித கண்ணியமும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க: அரபு அரசர்களின் அங்கியைவிட புனிதமான அர்ஜெண்டினா ஜெர்சி? - நீல நிறத்தின் புரட்சிகர வரலாறு இதுதான்..!

எல்லாவற்றுக்கும் மேலாக போர் ஏழ்மை, அநீதி ஆகியவற்றால் குழந்தைகளை தான் பெரிதும் பாதிக்கிறது.ஏசு கிறிஸ்து ஏழையாக பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார், ஏழையாகவே உயிர்துறந்தார். எனவே,பிறருக்கு நல்லதை செய்யாமல் யாரும் இந்த கிறிஸ்துமஸைக் கடந்து செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார்.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் விழா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் மீண்டும் இயல்பான உற்சாகத்துடன் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

First published:

Tags: Christmas, Christmas eve, Pope Francis, Vatican