உலகெங்கும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...

உலகெங்கும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...

படம்: ராய்ட்டர்ஸ்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி உலகெங்கும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

 • Share this:
  கிறிஸ்துமஸ் நெருங்குவதையொட்டி உலகம் முழுதும் உள்ள குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குவதற்காக ஃபின்லாந்தில் உள்ள சான்டா கிளாசின் சொந்த கிராமமாக கருதப்படும் ரோவானேமியிலிருந்து புறப்பட்டார் சன்டா. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி குழந்தைகளுக்கு பரிசு வழங்க சான்டா தனது கலைமான் பூட்டிய வாகனத்தில் உலகம் முழுதும் பயணிக்கும் நிகழ்வு ரோவானேமியில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சான்டா தன் பயணத்தை துவக்கினார்.

  படம்: ராய்ட்டர்ஸ்
  தாய்லாந்து பள்ளிக்கூடத்தில் சான்டா உடையணிந்த யானை (படம்: ராய்ட்டர்ஸ்)


  தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சான்டா உடையணிந்த யானைகள் குழந்தைகளுக்கு முகக்கவசங்களை வழங்கி உற்சாகப்படுத்தின. யானைகளை வழிநடத்திச் சென்ற பாகன்களும் சான்டா உடையணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக யானைகளும் முகக்கவசம் அணிந்து இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றன.

  முகக்கவசங்களை சிறுமிகளுக்கு வழங்கும் சாண்டா யானை.
  முகக்கவசங்களை தாய்லாந்து சிறுமிகளுக்கு வழங்கும் சான்டா யானை.


  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பிரமாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. கராச்சியில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் இன மத வேறுபாடின்றி பல்வேறு தரப்பினரும் சான்டா உடையணிந்து பங்கேற்றனர். வேன்கள், இருசக்கர வாகனங்கள், ஒட்டக வண்டிகள் என விதவிதமான வாகனங்களில் சான்டாக்கள் வலம் வந்த காட்சி காண்போரை கவர்ந்தது.

  பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ்.
  பாகிஸ்தான் வீதிகளில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ்.


  ஜெர்மனியில் விலங்குகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தன. ஜெர்மனியின் பெர்லின் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு விருந்தளிக்கப்பட்டது. உயிரியல் பூங்காவில் உள்ள பாண்டா கரடிகளுக்கு ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளும், அவற்றின் விருப்ப உணவான மூங்கிலும் விருந்தாக அளிக்கப்பட்டது. டிசம்பர் 25 ஆம் தேதி தங்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் சிங்கக் குட்டிகளுக்கும் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த இரையை அவை தாவிப்பிடித்து உண்டு விளையாடிய காட்சி காண்போரை கவர்ந்தது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: