முகப்பு /செய்தி /உலகம் / தரைமட்டமான 2000 ஆண்டு பழமைவாய்ந்த துருக்கி கோட்டை!

தரைமட்டமான 2000 ஆண்டு பழமைவாய்ந்த துருக்கி கோட்டை!

காசியான்டெப் கோட்டை

காசியான்டெப் கோட்டை

காலப்போக்கில் சிதிலமைடந்த கோட்டை, அண்மையில் புனரமைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaTurkeyTurkeyTurkeyTurkeyTurkey

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால்,  2200 ஆண்டுகள் பழமையான காசியான்டெப் கோட்டை தரைமட்டமானது.

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்தன. அதில்,  2200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காசியான்டெப் கோட்டையும் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. ரோமானியர்கள் காலத்தில் ஹிட்டிடி என்ற பேரரசு இந்த கோட்டையைக் கட்டியதாக கூறப்படுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் காவல் கோபுரமாக இக்கோட்டை பயன்படுத்தப்பட்டு வந்தது.

காலப்போக்கில் சிதிலமைடந்த கோட்டை, அண்மையில் புனரமைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில், நிலநடுக்கத்தால் இந்த கோட்டை தரைமட்டமானது. இதே போன்று அந்நாட்டின் பல்வேறு பாரம்பரிய கட்டடங்களும் நிலநடுக்கத்தால் உருக்குலைந்தன.

First published:

Tags: Earthquake, Turkey, Turkey Earthquake