HOME»NEWS»INTERNATIONAL»200 gaurds tested corona positive who are in tha joe bidens inaguration function srs

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா

முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்ததால், பதவியேற்பு விழா நடைபெற்ற நாடாளுமன்ற கட்டடம் உட்பட வாஷிங்டன் நகரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா
  • Share this:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்ததால், பதவியேற்பு விழா நடைபெற்ற நாடாளுமன்ற கட்டடம் உட்பட வாஷிங்டன் நகரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாதுகாப்பு படை வீரர்கள் 200 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 15 ஆயிரம் வீரர்கள் வாஷிங்டன் நகரில் இருந்து புறப்பட அறிவுறுத்தப்பட்டுள்ள சூழலில், ஏழாயிரம் வீரர்கள் மட்டும் இம்மாத இறுதி வரை வாஷிங்டனில் பணியை தொடர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 100 நாட்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்ட அதிபர் ஜோ பைடன், முகக்கவசம் இல்லாமல் பொது வெளியில் தோன்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் நினைவிடத்துக்கு சென்ற பைடன், முகக்கவசம் அணியாமல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் முகக்கவசத்தை அணிந்தார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே, 53 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கேளிக்கை பூங்காவில் தற்காலிகமாக நடைபெறும் பணியில், நாளொன்றுக்கு நான்காயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், இன்னும் பல்வேறு தடுப்பூசிகள் சந்தைக்கு வர உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக, ஈரான் அரசின் மூத்த தலைவர் அயாதுல்லா காமெனியின் பெயரில் வெளியான ட்விட்டர் பதிவால் சர்ச்சை ஏற்பட்டது. பழிவாங்குவது உறுதி என அந்த பதிவில் குறிப்பிடப்பட்ட நிலையில், காமெனியின் பெயரில், அந்த ட்விட்டர் கணக்கு போலியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ட்விட்டர் நிர்வாகம் அந்த கணக்கை நீக்கியது.

 
Published by:Ram Sankar
First published: