தென்னாப்பிரிக்காவில் இரவு விடுதி ஒன்றில் சுமார் 20 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 20 வயதை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் இருந்து சுமார் 1,000 கிமீ தொலைவில் உள்ள நகரம் தெற்கு லண்டன். இங்குள்ள இரவு விடுதி ஒன்றில் சில இளைஞர்கள் பள்ளி பரிட்சை முடிந்ததை அடுத்து பார்ட்டி செய்ய வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை இந்த இரவு விடுதியில் பலர் மர்மான முறையில் உயிரிழந்த கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை இடத்தை சீல் வைத்து உடல்களை கைப்பற்றியுள்ளது. சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 பேர் எனவும், இதில் 17 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்தவர்கள், மீதம் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்களை காவல்துறை அவர்களின் உறவினர்களுக்கோ, ஊடகத்திற்கோ இதுவரை காட்டவில்லை. அதேவேளை, சிலரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல இளைஞர்கள் மர்மாக இறந்துள்ள இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உளவு பார்க்க திட்டம்.. படுக்கை அறையில் வசமாக சிக்கிய ஊழியர்
இது குறித்து அந்த மாகாணத்தின் தலைவர் ஆஸ்கர் மபுயானே கூறுகையில், 'இதை நம்பவே முடியவில்லை. இந்த இளைஞர்கள் யாரும் நோய்வாய்பட்டவர்கள் இல்லை. இவர்கள் விடுமுறையை குடும்பத்துடன் ஆனந்தமாக கழிக்க வேண்டியவர்களே. இதுபோன்று உயிரை விட்டுள்ளது பெரும் கவலையை தருகிறது' என்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.