• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 20 பேர் பலி, 300 பேர் படுகாயம்... பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்

20 பேர் பலி, 300 பேர் படுகாயம்... பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்

பாகிஸ்தான் நிலநடுக்கம்

பாகிஸ்தான் நிலநடுக்கம்

கட்டடங்களின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததில், 6 குழந்தைகள் உட்பட 20 மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம்.

  • Share this:
    பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 3 மணியளவில் தலைநகர் குவெட்டாவின் கிழக்கிலிருந்து 102 கிலோ மீட்டர் தொலைவில், 20 மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்க, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்தவாறு வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். கட்டடங்களின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததில், 6 குழந்தைகள் உட்பட 20 மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என, மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Also Read : 25 ஆண்டுகளில் முதல் முறை.. டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட பெரும் சரிவு!

    200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹர்னாய் நகர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, சாலைகள் சேதமடைந்தோடு மின்சாரம் மற்றும் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அரசு கட்டடங்கள் மட்டுமின்றி, 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து நாசமாகின. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: