சீனாவில் டேங்கர் லாரி வெடித்து 20 பேர் உயிரிழப்பு

சீனாவில் டேங்கர் லாரி வெடித்து 20 பேர் உயிரிழப்பு

Image: Reuters

சீனாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்த விபத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  கடந்த 13 ஆம் தேதி ஸீஜியாங் மாகாணத்தின் தைஸோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.

  தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 24 பேரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  Also read... இங்கிலாந்தில் சிறுபான்மை இனத்தவருக்கான அரசு ஆணையம் - பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவிப்பு
  Published by:Vinothini Aandisamy
  First published: