• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ‘எப்படி எல்லாமே ஒன்னா இருக்கும்?’- பிறப்பு குறித்து ஆராய்ந்த தோழிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

‘எப்படி எல்லாமே ஒன்னா இருக்கும்?’- பிறப்பு குறித்து ஆராய்ந்த தோழிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

2013ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வேலைபார்த்து வரும் ஜூலியா டிநெட்டி மற்றும் கசாண்ட்ரா மேடிசன் ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளானர்கள்.

  • Share this:
குழந்தைப்பருவத்தில் பிரிந்து போன சகோதர சகோதரிகள் வளர்ந்து எதிர்பாராத சூழலில் சந்தித்து, யாரென்ற உண்மை தெரியாமலே நண்பர்களாக அல்லது எதிரியாக இருப்பார்கள். பிறகு ஒரு நாள் உண்மை தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த குடும்பம் சேரும், பல சூப்பர்ஹிட் திரைப்படங்களின் கதை தான் இது. ஆனால், திரைப்படங்களை விட வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் உள்ளன. அக்கா தங்கை என்று தெரியாமலேயே எட்டு ஆண்டு நெருங்கிய நண்பர்களாக பழகிய பெண்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

2013ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வேலைபார்த்து வரும் ஜூலியா டிநெட்டி மற்றும் கசாண்ட்ரா மேடிசன் ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளானர்கள். இவர்கள் இருவருமே டொமினிகன் ரிபப்ளிக்கில் இருந்து குழந்தையாக இருக்கும் போது இரு வேறு குடும்பங்களால் தத்து எடுக்கப்பட்டு, கனக்டிகட்டில் வளர்ந்தார்கள். ஆனால், 2013ஆம் ஆண்டுக்கு முன் இவர்கள் சந்தித்ததில்லை.



டிநெட்டி வரவேற்பாளராக பணியாற்றி வந்த பாரில் மற்றொரு வேலைக்கான நேர்காணலுக்கு மேடிசன் வந்த போதே அவருடைய டாட்டூவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் டிநெட்டி. தான் எங்கிருந்து தத்து கொடுக்கப்பட்டார் என்ற விவரத்தை மற்றும் கூறினார் மேடிசன். ஆனால், விரைவிலேயே இருவருக்கும் இடையே அழகான நட்பு உருவாகியது. இவருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள், தோற்ற ஒற்றுமை மற்றும் ஆளுமைத்திறன் ஆகிய அனைத்துமே பாரின் வாடிக்கையாளர்களை வியக்க வைத்தது. அதற்கு இருவருமே தாங்கள் சகோதரிகளாக இருக்க வேண்டியவர்கள் என்று வேடிக்கையாக பல முறை தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்களுக்கே சந்தேகம் வந்து, தங்களின் அசல் பிறப்பு சான்றிதழ், பெற்றோர் ஆகியவற்றைப் பற்றி சரிபார்த்த போது, அந்த விவரங்கள் வெவ்வேறாக இருந்தன. இடையில், டிநெட்டியின் மற்றொரு தோழியும் டொமினிகன் ரிபப்ளிக்கில் இருந்து தத்து கொடுக்கப்பட்டவர் என்பதும், அவரின் ஆவணங்கள் டிநெட்டியுடன் மாறிவிட்டன என்றும் தெரிய வந்தன. இருவருமே ஒரே நாளில் தத்து கொடுக்கப்பட்டதால், இவை மாறிவிட்டன என்று கூறப்பட்டது. உண்மையான சான்றிதழ்களை சரிபார்த்த போது, டிநெட்டியும் மேடிசனும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அக்கா தங்கை என்று தெரிய வந்துள்ளது. டிஎன்ஏ டெஸ்ட்டும் அதை உறுதி செய்தது.

Must Read | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

இருவரில் ஸ்பானிஷ் மொழி அறிந்த மேடிசன் பெற்றோரை சந்திக்க முயற்சி செய்தார். அவர்களின் தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் என்றும், தந்தை மற்றும் மூத்த சகோதரர் மற்றும் இளைய சகோதரர்களை சந்தித்தார். டிநெட்டியும் அவர்களோடு பேச உதவி செய்து கொண்டிருக்கிறார். சகோதரிகள் மீண்டும் இணைந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இவர்களின் தந்தை தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக, மேடிசன் மற்றும் டிநெட்டி நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்தனர். குடும்பமாக உணர்வதற்கு, ரத்த உறவாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உணர்வு ரீதியாக யார் வேண்டுமானாலும் ஒரே குடும்பமாக இருக்கலாம் என்று மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: