பாகிஸ்தானில் கொரோனாவால் அரிய வகை உயினமான வெள்ளை புலி குட்டிகள் உயிரிழப்பு!

வெள்ளை புலி

விலங்குகளை பராமரிப்பவர்களிடம் இருந்து வெள்ளை புலி குட்டிகளுக்கு தொற்று பரவியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

  • Share this:
பாகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் உயிரிழந்த அரிய வகை உயினமான இரண்டு வெள்ளை புலி குட்டிகள் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் 11 வார வெள்ளை புலி குட்டிகள் இரண்டிற்கு உடல்நலம் திடீரென பாதிகப்பட்டது. சிகிச்சையை தொடங்கிய 4வது நாளில், அதாவது கடந்த ஜனவரி 30ம் தேதி அவை இரண்டும் உயிரிழந்தன. feline panleukopenia என்ற ஒருவகை வைரஸ் பாதிப்பின் காரணமாக இவை உயிரிழந்திருக்கலாம் என மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் கருதினர். இது போன்ற விலங்கினங்களில் இந்த வகை வைரஸ் பாதிப்பு என்பது வழக்கமான ஒன்று என்று அவர்கள் கூறினர்.

ஆனால் உடற்கூராய்வு அறிக்கையில் அந்த இரண்டு வெள்ளைபுலிக் குட்டிகளின் நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் நோயியல் நிபுணர்கள் புலி குட்டிகளின் இறப்புக்கு காரணம் அவை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் தான் என்று கூறுகின்றனர்.

புலி குட்டிகளின் இறப்புக்கு பின்னர் அவற்றிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் லாகூர் மிருகக் காட்சி சாலை இயக்குனர் அவை இரண்டும் கொரோனாவால் இறந்திருக்கக் கூடும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புலி குட்டிகளின் இறப்புக்கு பின்னர் மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதில் ஒருவர் தான் இறந்து போன இரண்டு புலி குட்டிகளையும் பராமரித்து வந்திருக்கிறார். இது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

விலங்குகளை பராமரிப்பவர்களிடம் இருந்து வெள்ளை புலி குட்டிகளுக்கு தொற்று பரவியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

மிகவும் அரிதான வெள்ளை புலிக்குட்டிகள் லாகூர் மிருகக் காட்சி சாலையில் ஏற்கனவே இரண்டு மரணமடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு புலி குட்டிகள் உயிரிழந்திருப்பது விலங்கு நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Published by:Arun
First published: