அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை...

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டிருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை...
அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை...
  • Share this:
இந்தியா, அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ அமைச்சர்கள் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.

முன்னதாக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்க் எஸ்பெரை சந்தித்து பேசினார். அப்போது, இந்திய பாதுகாப்பு துறையில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அமெரிக்க அமைச்சர்கள் குழுவுடன் இந்திய குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மேலும் படிக்க...4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துசென்று, சேர்ந்துவாழ வராததால் மனைவியை வெட்டிய நபர் கைது.. ( வீடியோ)


அதன்பின் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது பாதுகாப்புத்துறை சார்ந்த இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading