கவனக்குறைவால் வாங்கிய ஆன்லைன் லாட்டரி.. 2 மில்லியன் டாலர் பரிசாக கிடைத்ததில் இன்ப அதிர்ச்சி..

கோப்புப்படம்

அமெரிக்காவில் கவனக்குறைவால் வாங்கிய ஆன்லைன் லாட்டரி மூலம் 2 மில்லியன் டாலர் ஒருவருக்கு பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது.

 • Share this:
  அமெரிக்காவை சேர்ந்த நபர், ஆன்லைன் லாட்டரியில் ஒரே எண்கள் கொண்ட இரண்டு டிக்கெட்களை தவறுதலாக வாங்கிய நிலையில், அவருக்கு 2 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த சமீர் மசாஹீம், மெகா மில்லியன்ஸ் போட்டிக்காக 2 டாலர்கள் கொடுத்து இரண்டு லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார்.

  முதல் லாட்டரியின் எண்ணிலேயே, இரண்டாவது லாட்டரியையும் அவர் கவனக்குறைவாக வாங்கியதை உணர்ந்தார்.

  Also read: ஹாலோவீன் விழாவில் கலந்துகொண்டு, மாறுவேடமிட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்திய ட்ரம்ப்..

  இந்நிலையில், இரண்டு லாட்டரிகளுக்கும் தலா ஒரு மில்லியன் டாலர் பரிசு கிடைத்ததால், சமீர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இரண்டு லாட்டரிகளுக்கும் பரிசு விழுந்திருப்பதை தம்மால் நம்ப முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
  Published by:Rizwan
  First published: