டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு... இரண்டு பெண்கள் உயிரிழப்பு

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு... இரண்டு பெண்கள் உயிரிழப்பு
மாதிரி படம்
  • News18
  • Last Updated: February 4, 2020, 3:09 PM IST
  • Share this:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர் இந்தர துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அம்மாகாண போலீசார் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சம்பவம் நடைபெற்ற உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகம் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதோடு அல்லாமல், மாணவர்களும், பேராசிரியர்களும் இருக்குமிடத்திலேயே அடுத்த சில மணி நேரங்களுக்கு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
மேலும் பல்கலைக்கழத்தின் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக புதன் வரை ரத்து செய்யப்பட்டன. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இதே பல்கலைக்கழகத்தில் 750-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்த நிகழ்வின்போது இதே மாதிரியான ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அதிலும் இரு மாணவிகள் கொல்லப்பட்டனர் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading