ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி என்ற அமைப்பு ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூவரில் இருவர் இந்தியர்கள் எனவும், ஒருவர் பாகிஸ்தானியர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், அங்கு விமான நிலைய விரிவாக்க பணிகள் மட்டுமே நடந்து வந்ததால், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை: அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி
எனினும், அரசுக்கு சொந்தமான ADNOC எண்ணெய் கிடங்கிலும் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 3 ஆயில் டாங்கர்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறின. ஆரம்பத்தில் இது விபத்து என்று நினைக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணையில் ட்ரோன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது.
இந்த தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பான ஹவுத்தி இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய சவூதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்து செயல்படும் அமைப்பாக இந்த ஹவுத்தி அமைப்பு அறியப்பட்டு வருகிறது. சவூதி அரேபியா மீது ஹவுத்தி அமைப்பு பலமுறை எல்லை தாண்டிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாகக் கடந்த காலங்களில் பல முறை இந்த அமைப்பு அச்சுறுத்திவந்த நிலையில், இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக, அபுதாபி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியது. தற்போது தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணையை ஐக்கிய அரபு அமீரகம் தொடங்கியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கப்பலை ஹவுத்திகள் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு அபுதாபியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கைப்பற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கப்பல் மற்றும் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில்,
Also read: கொரோனா காரணமாக பள்ளிகளை மூடுவதில் நியாயமில்லை: உலக வங்கி கல்வி இயக்குனர்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.