ஹோம் /நியூஸ் /உலகம் /

தாலிபான்கள் கையகப்படுத்திய பிறகு காபுலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம் - எந்த நாட்டுடையது?

தாலிபான்கள் கையகப்படுத்திய பிறகு காபுலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம் - எந்த நாட்டுடையது?

kabul airport

kabul airport

காபுல் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு விமானம் ஒன்று தரையிறங்கியிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கையகப்படுத்திய பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு விமானம் ஒன்று காபுல் விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் தாலிபான்களின் கை ஓங்கியது. ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வந்த தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தலைநகர் காபுலை கைப்பற்றினர். இதனையடுத்து ஆப்கனின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரமும் தாலிபான்கள் கைக்கு சென்றது.

இதனிடையே தாலிபான்கள் திடீரென தலைநகரை கைப்பற்றியதால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆப்கனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். காபுல் விமான நிலையம் மட்டுமே ஆப்கனை விட்டு வெளியேற ஒரு வழியாகவும் இருந்தது. தாலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் காபுல் விமான நிலையத்தில் குவிந்தனர். ஏதேனும் ஒரு விமானத்தில் ஏறி நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டும் என அவர்கள் கருதினர். அது போல ஒரு விமானத்தின் இறக்கையில் ஏறி பயணம் செய்த மூன்று பேர் விமானம் பறந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து இறந்தது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா, இதன் பின்னர் அமெரிக்கர்கள், இந்தியர்கள் என பல நாட்டினரும் மீட்பு விமானங்களை அனுப்பி வைத்து காபுலில் இருந்து வெளியேறினர். அத்துடன் காபுல் விமான நிலையமும் மூடப்பட்டது.

Also Read: ஓசூர் தொழிற்சாலையை உலக வரைபடத்தில் மையப்படுத்தும் ஓலா நிறுவனத்தின் சூப்பர் பிளான்!

இதனிடையே மூடிக்கிடக்கும் காபுல் விமான நிலையத்தை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்க முயற்சி மேற்கொண்டுள்ள தாலிபான்கள் கத்தார் உள்ளிட்ட சில நாடுகளின் தொழில்நுட்ப உதவியுடன் காபுல் விமான நிலையத்தை திறந்துள்ளனர்.

காபுல் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு விமானம் ஒன்று தரையிறங்கியிருக்கிறது.

Also Read:   டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி கார்.. லோ பட்ஜெட்டில் ஒரு மினி ஹாரியராக களமிறங்குகிறது..

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காபுல் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் 10 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பயணிகளை காட்டிலும் பணியாளர்களே அதிகம் இருந்துள்ளனர்.

இதனையடுத்து ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்கு சுமார் 80 பயணிகள் இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban