Home /News /international /

மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து - கோர விபத்தில் 19 பேர் மரணம்

மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து - கோர விபத்தில் 19 பேர் மரணம்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து

பாகிஸ்தானில் பேருந்து விபத்து

இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் நாட்டில் மலையில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், பலுச்சிஸ்தான் பகுதியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு 30 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்து மலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தவறி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

    இதில் சம்பவயிடத்திலேயே 19 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழையும், பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவுமே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து அப்பகுதியின் உதவி காவல் ஆய்வாளர் மெஹ்தாப் ஷா கூறுகையில், பாதிப்புக்குள்ளான 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது. உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    இதையும் படிங்க: பண்ணையில் 1,000 பன்றிகள் பட்டினி மரணம் - ஒரு வாரம் மறைத்து வைத்த 33 வயது பெண் நிர்வாகி கைது

    இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தரமற்ற உட்கட்டமைப்பு காரணமாக பொது போக்குவரத்து மற்றும் பேருந்து விபத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதே பலுச்சிஸ்தான் பிராந்தியத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட மினி பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களாவர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Accidents, Bus accident

    அடுத்த செய்தி