ஹோம் /நியூஸ் /உலகம் /

தேடத்தேட கிடைக்கும் மனித உடல்கள்.. ஆற்றில் விழுந்த விமான விபத்தில் 19 பேர் பலி!

தேடத்தேட கிடைக்கும் மனித உடல்கள்.. ஆற்றில் விழுந்த விமான விபத்தில் 19 பேர் பலி!

விமான விபத்து

விமான விபத்து

49 பயணிகளுடன் நேற்று சென்றுகொண்டிருந்த விமானம் விபத்தில் சிக்கியது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தான்சானியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்தனர். 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்

  ஆப்பிரிக்கா கண்டம் தான்சானியாவில் ப்ரேஸிஸின் ஏர் என்ற தனியார் விமானம் 49 பயணிகளுடன் நேற்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் புகோப நகரில் தரையிறங்குவதற்கு 100 மீட்டர் தொலைவில் மோசமான வானிலை காரணத்தினால் நிலைதடுமாறி நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

  விமானத்தின் 43 பயணிகள் மற்றும் ஊழியர்கள் 6 பேர் பயணம் செய்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி ஏரியில் விழுந்த விமானத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

  விண்வெளிக்கு பறக்கும் குரங்குகள்.. இனப்பெருக்க ஆராய்ச்சியில் அடுத்தக்கட்டம் செல்லும் சீனா!

  அதனைத் தொடர்ந்து, ப்ரேஸிஸின் ஏர் வெளியிட்ட செய்தி அறிவிக்கையில், மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

  பிகோப நகர மண்டல ஆணையர் ஆல்பர்ட் சலமில அளித்த தகவலின் படி, ஏரியில் விழுந்த 24 பயணிகளைக் காப்பாற்றியுள்ளனர். 3 பேரை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் தொலைந்தவர்களை தேடும் பணியில் பல சடலங்களே மீட்கப்பட்டனர். இதுவரை 19 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

  தற்போது மீட்புப் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  சிறிய அளவிலான விமானம் பாதிக்கு மேல் நீரில் மூழ்கிய நிலையில் கயிறு மூலம் கரைக்கு இழுக்க செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அப்பகுதி மீனவர்களும் ஏரியில் தொலைந்தவர்களை தேடி வருகின்றனர். தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன், இந்த சம்பவத்திற்காக இரங்கலை தெரிவித்துள்ளார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Flight Accident, Flight Crash