Home /News /international /

Lion Air flight: விமான விபத்தில் உயிரிழந்த 189 பேரில் 6 பேரின் உடல்கள் மீட்பு

Lion Air flight: விமான விபத்தில் உயிரிழந்த 189 பேரில் 6 பேரின் உடல்கள் மீட்பு

விமானத்தில் இருந்தவரின் உறவினர் பிராத்தனை செய்யும் படம் (Photo: AP)

விமானத்தில் இருந்தவரின் உறவினர் பிராத்தனை செய்யும் படம் (Photo: AP)

ரேடாரில் இருந்து விமானம் மறைந்த இடத்திற்கு இந்தோனேசிய மீட்புத் துறையினர், சென்று பார்த்தபோது விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
இந்தோனேசிய விமான விபத்தில் 189 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கல் பினாங்குக்கு லயன் ஏர் நிறுவனத்தின் விமானம், நேற்று காலை புறப்பட்டது.  போயிங் 737 மேக்ஸ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தை, இந்தியாவை சேர்ந்த விமானி பவ்யே சுனேஜா இயக்கியுள்ளார். ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையின் ரேடார் திரையில் இருந்து விமானம் மறைந்துள்ளது.

ரேடாரில் இருந்து விமானம் மறைந்த இடத்திற்கு இந்தோனேசிய மீட்புத் துறையினர், சென்று பார்த்தபோது விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு மேற்கொண்ட தேடுதல் பணியில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்திய பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் இருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான பலத்தையும், தைரியத்தையம் அளிக்க இறைவனிடம் வேண்டுவதாக பிரதமர் கூறியுள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Flight Accident, Indonesia, Lion Air

அடுத்த செய்தி