ஹோம் /நியூஸ் /உலகம் /

இலங்கை டு ஆஸ்திரேலியா.. வழி கேரளா- சட்ட விரோதமாக நுழைய முயன்ற 183 பேர் திருப்பி அனுப்பிவைப்பு

இலங்கை டு ஆஸ்திரேலியா.. வழி கேரளா- சட்ட விரோதமாக நுழைய முயன்ற 183 பேர் திருப்பி அனுப்பிவைப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடத்தல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 183 பேரை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இலங்கையில் இருந்து கடந்த ஓராண்டில் 183 பேர் ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக நுழைய முயன்றதாகவும், இதில் பலர் இந்தியாவின் கேரளா வழியாக நுழைய முயன்றதாகவும் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய தலைவர் டெல்லியில் அக்டோபர் 14ம் தேதி 20ம் தேதிவரை நஎடைபெற்ற ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ரியர் அட்மிரல் ஜோன்ஸ் பங்கேற்றிருந்தார். இதில் அவர் பேசியபோது,  ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தின் மூலமாக ஆஸ்திரேலியா, ஆசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய கடலோர காவல் முகமைகளுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்தி அதை வலுப்படுத்தவும் சிவில் கடல்சார் பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

  மேலும், கடலில் நடைபெறும் குற்றங்களை எதிர்த்து போராடி அவற்றைத் தடுப்பதற்கு இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டு செயல்பாட்டு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா சமீபகாலமாக சிவில் கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

  இந்த ஆண்டு கடல்வழி ஆட்கள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை அயராது உழைத்ததால் கடத்தல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 183 பேரை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளது என்றும் சமீபத்தில் கேரளாவில் இருந்து படகு மூலமாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற பலர் கைது செய்யப்பட்டதை அறிந்துள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Australia, Sri Lanka, Srilankan Refugees