பற்கள், முடி சேதமாகாமல் கண்டெடுக்கப்பட்ட 18,000 ஆண்டுகள் பழமையான உயிரினம்...!

Dogor என்று பெயர் சூட்டி செல்லமாக அழைத்து வருகின்றனர். டோகர் என்றால் தோழர் என்று அர்த்தமாம்..!

பற்கள், முடி சேதமாகாமல் கண்டெடுக்கப்பட்ட 18,000 ஆண்டுகள் பழமையான உயிரினம்...!
18,000 ஆண்டுகள் பழமையான நாய்
  • News18
  • Last Updated: November 29, 2019, 4:52 PM IST
  • Share this:
சைபீரியா குளிர் மிகுந்த இடம் என்பதும் அங்கு பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) என்கிற மண் மற்றும் கற்கள் உறைந்த நிலையில் இருப்பதும் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த மண்ணிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் உறைந்த நிலையில் அறிய வகை விலங்குளை கண்டெடுப்பது வழக்கம்.

அப்படி தற்போது ஆராய்ச்சியாளர்கள் 18,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விலங்கை கண்டறிந்துள்ளனர். இதில் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்னவெனில் அந்த விலங்கு சமீபத்தில் இறந்ததைப் போல் உடல் முழுவதும் முடி சிலிர்த்து காணப்படுகிறது. பற்கள் பால் போல் வெள்ளையாகவும் இருந்துள்ளன. இதைக் கண்டு ஆராய்ச்சியாளர்களே அதிசயித்துள்ளனர்.
இதை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்த போது 18,000 ஆண்டுகள் உலகின் பழமை வாய்ந்த ஆண் விலங்கு என்று கண்டறிந்துள்ளனர். ஆனால் இது நாயா அல்லது ஓநாயா என்று கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.ஒருகட்டத்தில் அது பப்பி நாய் என்று முடிவு செய்து Dogor என்று பெயர் சூட்டி செல்லமாக அழைத்து வருகின்றனர். டோகர் என்றால் தோழர் என்று அர்த்தமாம்.அதை மியூசியத்தில். ஆராய்ச்சியாளர்கள் லாவகமாகக் கழுவி சுத்தமாக வைத்துளனர்.

 

 

 
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்