சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து...தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் பலி!
Sudan FactoryFire தொழிற்சாலையில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வகையிலான இயந்திரங்கள் அதிகம் இருந்ததும் தீவிபத்தி பரவியதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

(REUTERS)
- News18
- Last Updated: December 4, 2019, 5:50 PM IST
சூடால் நாட்டில் உள்ள ஒரு செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 18 இந்தியர்கள் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடால் தலைநகர் கார்டும் பகுதியில் உள்ள ஒரு செராமிக் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 23 பேர் பலியாகியுள்ளனர். எல்பிஜி சிலிண்டர் வெடித்து இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. படுகாயமடைந்துள்ள 130 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானவர்களுள் 18 பேர் இந்தியர்கள். மேலும், 16 இந்தியர்கள் காணவில்லை என்றும் சூடான் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 7 இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இவர்களின் பெயர் பட்டியலை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.தீவிபத்தில் அங்கு பணியாற்றிய 34 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அந்தத் தொழிற்சாலையில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வகையிலான இயந்திரங்கள் அதிகம் இருந்ததும் தீவிபத்தி பரவியதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும் பார்க்க: பனியால் மூடப்பட்ட கேதர்நாத் கோவில் - வீடியோ

Loading...