முகப்பு /செய்தி /உலகம் / உயிர் பிழைக்க என் சிறுநீரையே குடித்தேன்.. 94 மணிநேரம் இடிபாடுகளில் சிக்கித் தவித்த இளைஞரின் உருக்கமான பேச்சு

உயிர் பிழைக்க என் சிறுநீரையே குடித்தேன்.. 94 மணிநேரம் இடிபாடுகளில் சிக்கித் தவித்த இளைஞரின் உருக்கமான பேச்சு

தனது சிறுநீரை குடித்து உயிர்பிழைத்த இளைஞர்

தனது சிறுநீரை குடித்து உயிர்பிழைத்த இளைஞர்

துருக்கியில் இடிபாடுகளில் சிக்கித் தவித்த 17 வயது இளைஞர் ஒருவர் தனது சிறுநீரையே குடித்து உயிரை தற்காத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaIstanbul Istanbul

துருக்கி-சிரியா எல்லையில் பிப்ரவரி 6ஆம் தேதி நிகழ்ந்த மோசமான நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 25,000ஐ தாண்டியுள்ளன. இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பெருமளவில் உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்பட்டுள்ளன.

துருக்கியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்த நெகிழ்ச்சிக்குரிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  அப்படித்தான் நிலநடுக்கத்தின் மையமான காசியன்டெப் பகுதியில் 17 வயது இளைஞர் ஒருவர் 94 மணிநேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். காசியன்டெப் பிராந்தியத்தின் ஷெஹித்காமில் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் அத்நன் முகமது கொர்குத் வசித்த அடுக்குமாடி குடியிருப்பு நிலநடுக்கத்தில் சரிந்து விழுந்துள்ளது.

இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இளைஞரை கொர்குத்தை 94 மணிநேரம் கழித்து கடந்த வியாழக்கிழமை தான் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட தருணத்தில் அந்த இளைஞர் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் தான் இணையத்தில்  டிரெண்டாகி வருகிறது. மீட்பு பணியில் ஈடுபட்ட நபர்களிடம் அந்த இளைஞர் உணர்ச்சி பெருக்குடன், "இவ்வளவு நேரம் உங்களுக்காகத் தான் காத்திருந்தேன். யாராவது வருவார்களா என பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக எனது சிறுநீரையே குடித்து உயிரை காத்து வந்தேன். நல்ல வேளை, கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.

சுமார் 4 நாள்கள் இடிபாடுகளில் சிக்கித்தவித்த இந்த இளைஞர் தான் உயிர் பிழைக்க வேண்டும் என தனது சிறுநீரை குடித்து மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் காத்திருந்துள்ளார். நான்கு நாள்கள் தூங்காமல் விழித்து யாராவது மீட்க வருவார்கள் என இவர் காத்திருந்துள்ளார். மீட்கப்பட்ட உடன் கண்களில் நெகிழ்ச்சி பொங்க அவர் பேசிய வீடியோவை பார்த்து பலரும் அந்த இளைஞரின் போராட்ட குணத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பூகம்பத்தில் பூத்த அதிசயம் இவள் 'அயா'.. பெற்றோரை இழந்த பச்சிளம் குழந்தையை தத்தெடுக்க உலகெங்கும் ஆர்வம் காட்டும் மக்கள்

துருக்கியில் கடும் குளிருக்கு மத்தியிலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.இதுவரை, சுமார் 75,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.துருக்கி நூற்றாண்டு காணாத பேரிடரை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் எர்டோகான் உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

First published:

Tags: Turkey, Turkey Earthquake, Viral Video