முகப்பு /செய்தி /உலகம் / குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 17 பேர் உயிரிழப்பு

குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 17 பேர் உயிரிழப்பு

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் உள்ள விமானப்படை அலுவலகத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில் பொதுமக்கள் 12 பேரும், விமானத்தில் இருந்த 5 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க...  நிலச்சரிவில் 61 பேர் பலி: பாலம் உடையும் பதறவைக்கும் காட்சி!


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

top videos


    First published:

    Tags: Pakistan Army, Plane crash