ஆஸ்திரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவரின் சாகச விளையாட்டு விபரீதமாக மாறி உயிரையே பறித்த சோக நிகழ்வாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள பெர்த் நகரில் ஸ்வான் என்ற மிகப்பெரிய நதி ஓடுகிறது. இந்த நதியில் ஜெட் ஸ்கை எனப்படும் நீரில் செல்லும் மோட்டார் சைக்கிள் சவாரி சாகசம் பிரபலமாகும். மேலும், இந்த நதி பகுதியில் டால்பின்கள் அதிகம் காணப்படுவதால் சுற்றுலாவாசிகள் ஆர்வத்துடன் இங்கு வருகை தந்து விளையாடி மகிழ்வார்கள். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை வேலையில் பெர்த்தில் வசிக்கும் ஸ்டெல்லா பெரி என்ற 16 வயது மாணவி தனது நண்பர்களுடன் இந்த நதிப் பகுதிக்கு விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க வந்துள்ளார்.
முதலில் இவர் தனது நண்பர்களுடன் ஜெட் ஸ்கை சவாரியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த நதியில் கூட்டம் கூட்டமாக டால்பின்கள் நீந்திக்கொண்டிருந்தன. அவற்றை பார்த்து உற்சாகமடைந்த ஸ்டெல்லாவுக்கு டால்பின்களுடன் தானும் நீந்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நீருக்குள் குதித்து நீந்து டால்பின்களுக்கு அருகே செல்லத் தொடங்கினார். அப்போது தான் நதிக்கு அடியில் இருந்த சுறா என்று எதிர்பாராத விதமாக வெளியே வந்து ஸ்டெல்லாவை தாக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: முகத்தில் 50 கத்திக்குத்து.. ஒரே தோற்றம்.. இளம்பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த மாடல் அழகி.. பகீர் சம்பவம்!
ஸ்டெல்லாவை கடித்த அந்த சுறா, அவரை நீருக்கு அடியில் இழுத்துச் சென்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லாவின் நண்பர்கள் சுறாவிடம் இருந்து மீட்க போராடினர். ஆனால், சுறாவோ மாணவி ஸ்டெல்லாவை கொடூரமாக கடித்து குதறியது. கடைசியாக, சுறாவே சிறுமியை தண்ணீருக்குள் விடுவித்து சென்றது.
தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்டெல்லா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 16 வயது மாணவி ஸ்டெல்லாவின் இந்த எதிர்பாராத மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து அதிக அளவிலான சுறா தாக்குதல்கள் ஆஸ்திரேலியாவில் தான் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Australia, Whale shark