முகப்பு /செய்தி /உலகம் / கடலில் சிக்கிய 16 அடி மீன்! - கெட்ட சகுனம் என மீனவர்கள் கலக்கம்!

கடலில் சிக்கிய 16 அடி மீன்! - கெட்ட சகுனம் என மீனவர்கள் கலக்கம்!

சிலியில் பிடிப்பட்ட 16 அடி துடுப்பு மீன்.

சிலியில் பிடிப்பட்ட 16 அடி துடுப்பு மீன்.

மீன்களின் ராஜா என்று அழைக்கப்படும் துடுப்பு மீன் கடலின் ஆழத்தில் வாழக்கூடியது. சுமார் 16 அடிக்கு மேல் வளரும். இது மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடியது.

  • 1-MIN READ
  • Last Updated :

தெற்கு அமெரிக்க நாடான சிலியில் உள்ள அரிகா என்ற இடத்தில் மீனவர்களிடம் பிடிபட்ட 16 அடி நீள மீனின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அளவு பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

அந்த காணொளியில் மீனவர்கள் குழுவிற்கு மத்தியில் கடலில் இருத்து பிடிபட்ட 16 அடி நீளமுள்ள துடுப்பு போன்ற மீனை கிரேனின் உதவியுடன் வெளியில் தூக்குகின்றனர். அப்போது சுற்றியுள்ள அனைவரும் அதனைப் புகைப்படம் எடுக்கின்றனர்.

அந்த மீன் கவனம் ஈர்க்க அதன் அளவு மட்டும் இல்லாமல் அதனுடன் இணைத்துச் சொல்லப்படும் மூடநம்பிக்கையும் காரணமாக உள்ளது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன் கடலின் மேல் பரப்பில் பொதுவாகக் கிடைக்கக்கூடிய மீன் இல்லை. துடுப்பு மீன் என்று அழைக்கப்படும் இது கடலின் ஆழத்தில் வாழக்கூடியது. அவை நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, ​​இறக்கும்போது அல்லது இனப்பெருக்கம் செய்யும் போது மட்டுமே மேற்பரப்புக்கு வரும். இது கடல் பரப்பில் வந்தால் நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவு நிகழ்வுகள் வரும் என்பது பழங்கால நம்பிக்கையாக இருக்கிறது.

இணையத்தில் பலர் இந்த மீன் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மேல் பரப்பிற்கு வந்திருக்கலாம் என்று கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு எந்த விதமான அறிவியல் சான்றும் கிடையாது.

' isDesktop="true" id="772292" youtubeid="hqoFGLom0Ug" category="international">

மீன்களின் ராஜா என்று அழைக்கப்படும் துடுப்பு மீன் கடலின் ஆழத்தில் வாழக்கூடியது. சுமார் 16 அடிக்கு மேல் வளரும். இது மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடியது. இதற்கு எதிர்கால கணிப்பு சக்தி இருக்கிறது என்று நாட்டுப்புற புராணக்கதையும் உண்டு.

2011 ஆம் ஆண்டு இந்த மீன் ஜப்பானின் ஏற்பட்ட ஃபுகுஷிமா நிலநடுக்கத்திற்கு முன்பு காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிதளவு இதனின் மூடநம்பிக்கை கதைகள் பரவியது.

தற்போது பிடிபட்ட துடுப்பு மீனின் காணொளி டிஃடாக் செயலியில் முதலில் பகிரப்பட்டு 10 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நியூசிலாந்து கடலில் துடுப்பு மீன் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Fish, Fisherman