ஹோம் /நியூஸ் /உலகம் /

குறைபாடுகளுடன் உள்ள கருவை கலைப்பது குற்றம் - போலந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு

குறைபாடுகளுடன் உள்ள கருவை கலைப்பது குற்றம் - போலந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். (AP Photo/Czarek Sokolowski)

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். (AP Photo/Czarek Sokolowski)

போலந்தில் குறைபாடுகளுடன் உள்ள கருவை கலைப்பது சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

போலந்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை ஆணையர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் போலந்தின் பல்வேறு நகரங்களில் திரண்ட பெண்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கர்ப்பம் அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற சட்டவிரோத செயல்களின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பத்தை மட்டுமே கலைக்க போலந்தில் அனுமதி வழங்கப்படுகிறது.

Also read... இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை கடந்தது...!

2019 ஆம் ஆண்டு போலந்தில் செய்யப்பட்ட 1,110 சட்டபூர்வமான கருக்கலைப்புகளில் பெரும்பாலானவை மரபணு குறைபாடுகள் காரணமாக செய்யப்பட்டன என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு நாடு முழுதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Poland