• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீனாவை சூறையாடும் கனமழை - 141 பேர் உயிரிழப்பு; 3 கோடி பேர் பாதிப்பு

சீனாவை சூறையாடும் கனமழை - 141 பேர் உயிரிழப்பு; 3 கோடி பேர் பாதிப்பு

சீனாவில் கனமழைக்கு இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். (படம்: AP)

சீனாவில் கனமழைக்கு இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். (படம்: AP)

சீனாவில் 27 மாகாணங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இரண்டாம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சீனாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 28,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் ஜியாங்க்சி மாகாணத்தில் பெய்து வரும் மழையால் மிகத்தீவிர வெள்ள அபாய அவசர நிலை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    போயங்க் லேக் என்ற சீனாவின் மிகப்பெரிய நீர்நிலையில இதுவரை இல்லாத வகையில் 22.5 மீட்டர் அளவு தண்ணீர் செல்கிறது. இது 1998ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிக அளவாகும். 32 நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஹூபேய் மாகாணத்திலும் இதுவரை இல்லாத அளவு திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யாங்க்ஷி நதியில் ஹன்கோவ் நிலையத்தில் வெள்ளத்தின் அளவு 28.44 மீட்டராக உள்ளது. இது 2016ம் ஆண்டு அளவை விட மிக அதிகமாகும். மேலும் இந்த அளவானது அந்த நதியின் வரலாற்றில் 5வது மிகப்பெரியதாகும்.

    Also see:

     

    சாங்க்குவிங், அன்ஹூய், ஜியாங்க்சி, ஹூபேய் மாகாணங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் நிலைமை சிக்கலாகியுள்ளது.

    வெள்ளச் சூழலை கண்காணித்த சீன அதிபர் ஷி ஜின்பின், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சீனாவின் தெற்குப் பகுதியில் கடந்த மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர 322 கோடி ரூபாய் நிதியை சீன அதிபர் அறிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: