ஹோம் /நியூஸ் /உலகம் /

குப்பைகளுக்கு தீ வைப்பு.. நொறுக்கப்பட்ட வாகனங்கள்! விலைவாசி உயர்வால் போர்க்களமான பாரிஸ்!

குப்பைகளுக்கு தீ வைப்பு.. நொறுக்கப்பட்ட வாகனங்கள்! விலைவாசி உயர்வால் போர்க்களமான பாரிஸ்!

பிரெஞ்சு - பாரிஸ் போராட்டம்

பிரெஞ்சு - பாரிஸ் போராட்டம்

சம்பளம் குறைவாக இருக்கும் நிலையில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய போராடி வருவதாகவும், கண்ணியமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க இயலாத சூழலில் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai |

  பிரான்சின் தலைநகர் பாரிசில், விலைவாசி உயர்வு மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு எதிராக புதிதாக முடிசூட்டப்பட்ட நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர் உட்பட ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

  ஊதிய உயர்வுகள் மற்றும் அடிப்படை வாழ்வாதார கொள்கைகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, பிரான்ஸின் இடதுசாரி அன்போட் கட்சியின் தலைவர் ஜீன்-லூக் மெலன்சோன் தலைமையில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

  ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மையை இழந்த மக்ரோனின் அரசாங்கமும் பாராளுமன்றத்தில் தன் நிலையை தற்காலிகமாக தற்காத்து வருகிறது. உள்நாட்டு நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவது அவரது மையவாத கூட்டணிக்கு மிகவும் கடினமாக உள்ளது. மேலும் அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் பட்ஜெட் திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதமும் உருவாக்க கடினமான நிலையில் உள்ளது.

  வறுமையில் சிக்கி தவிக்கும் 130 கோடி மக்கள் - வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் இன்று!

  மறுபுறம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சங்களை அடைந்து வருகிறது. சம்பளம் குறைவாக இருக்கும் நிலையில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய போராடி வருவதாகவும், கண்ணியமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க இயலாத சூழலில் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

  காலநிலை நெருக்கடிக்கு எதிராக பாரிய முதலீட்டிற்கு அழைப்பு விடுத்ததுடன், எரிசக்தி, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வாடகைகளின் விலைகளில் முடக்கம் மற்றும் அதிக வரிவிதிப்பு உட்பட, அதிக விலைக்கு எதிரான அவசர நடவடிக்கைகளை எடுக்கக் கோரி போரட்டம் நடத்தினர்.

  உக்ரைனை NATOவில் சேர்த்தால் 3ஆம் உலகப் போர் ஏற்படும்.. ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!

  செவ்வாயன்று போக்குவரத்து வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வுக்காக ஏற்கனவே எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் வேலை நிறுத்தத்தில் உள்ளதால் பெட்ரோல் பற்றாக்குறை, மற்றும் பெட்ரோல் விலை உயர்வைத் தூண்டுகிறது. இது மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக தெரிவிக்கின்றனர்.

  ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் தெருக்களின் ஓரங்களில் இருந்த குப்பை தொட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. வங்கி இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலகத்தடுப்பு போலீசார் போராடி சட்ட ஒழுங்கை நிலைநாட்டினர். ஆயினும் பாரிஸின் தெருக்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி காணப்பட்டது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Emmanuel Macron, French President Emmanuel Macron, Paris