Home /News /international /

ரூ.38.80 லட்சம் பரிசுத்தொகை - அமெரிக்க உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அமெரிக்க மாணவி

ரூ.38.80 லட்சம் பரிசுத்தொகை - அமெரிக்க உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அமெரிக்க மாணவி

ஹரினி லோகன் வெற்றி

ஹரினி லோகன் வெற்றி

Seplling Bee 2022 - நான்காவது மற்றும் இறுதி வாய்ப்பான இந்தாண்டு உத்வேகத்துடன் போட்டியில் பங்கேற்ற, ஹரிணி சாம்பியனாகி கனவை நனவாக்கியுள்ளார்.

    அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது இந்திய அமெரிக்க மாணவி ஹரிணி லோகன் அந்நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற தேசிய உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். 90 வினாடிகளில் 21 வார்த்தைகளை சரியாக உச்சரித்து ஹரிணி 2022ஆம் ஆண்டின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இரண்டாம் இடத்தை டென்வர் பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவர் விக்ரம் ராஜூ என்ற இந்திய அமெரிக்க மாணவர் பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் இவரால் 90 நிமிடங்களில் 15 வார்த்தைகள் மட்டுமே சரியாக உச்சரித்தார்.

    ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடைபெறும் இந்த ஸ்பெல் பீ எனப்படும் உச்சரிப்பு போட்டியில் பெரும்பாலும் இந்திய வம்சாவளி மாணவ மாணவியர்களே சாம்பியன் பட்டம் வெல்வது வாடிக்கை. 2019ஆம் ஆண்டில் அனைத்து மாணவர்களும் உச்சபட்ச அளவில் சிறப்பான பங்களிப்பை தந்ததால், எட்டு பேருக்கு சாம்பியன் பட்டம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த எட்டு பேரிலும் எழு பேர் இந்திய அமெரிக்கர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


    இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் முறையாக 2020ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த போட்டி ரத்தானது. தொடர்ந்து இந்திய வம்சாவளியினரே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த உச்சரிப்பு போட்டியில் கடந்தாண்டு முதல் முறையாக ஆப்ரிக்க அமெரிக்கரான 14 வயது மாணவி சைலா அவந்த்கிரடே சாம்பியன் பட்டம் பெற்றார். இந்தாண்டு மீண்டும் இந்திய அமெரிக்க மாணவி சாம்பியன் பட்டம் பெற்றார். இவர் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதிப்போட்டியில் நடுவர்களால் வெளியேற்றப்பட்டு பின்னர் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: 4500 ஆண்டுகள் பழைய உலகின் மிகப்பெரிய உயிரினத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

    pullulation என்ற வார்த்தைக்கு இவர் முதலில் கொடுத்த விளக்கத்தை நடுவர்கள் ஏற்காத நிலையில், பின்னர் மாணவி ஹரிணி தந்த விளக்கம் முறையானது தான் ஏற்றுக்கொண்டனர். நான்காவது மற்றும் இறுதி வாய்ப்பான இந்தாண்டு உத்வேகத்துடன் போட்டியில் பங்கேற்ற, ஹரிணி சாம்பியனாகி கனவை நனவாக்கியுள்ளார். சாம்பியன் ஹரிணிக்கு ரூ.38.80 லட்சம் பரிசு தொகை கிடைத்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்சுடன் இருந்து தான் உத்வேகம் பெற்றதாக சாம்பியன் பட்டம் வென்ற மாணவி ஹரிணி தெரிவித்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: USA

    அடுத்த செய்தி