ஹோம் /நியூஸ் /உலகம் /

ஈராக்கில் ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு!!.

ஈராக்கில் ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு!!.

ஈராக்

ஈராக்

ஈரானிய குர்துகளின் 10 தளங்களை குறி வைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈராக்கிய குர்திஷ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஈராக்கின் குர்திஸ்தானில் ஈரானின் புரட்சிகர காவல்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

  ஈராக்கின் சுமைமானிய மாகாணத்தில் உள்ள ஸர்க்வெசேலா கிராமத்தில் நேற்று காலை ஆளில்ல விமானம் மற்றும் ஏவுகனைகளை கொண்டு ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியுள்ளது. வீடுகள், இராணுவ தளங்கள் மற்றும் தொடக்க பள்ளிக்கு அருகே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 13 பேர் பரிதபமாக உயிரிழந்துள்ளனர்.

  Also Read: அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்: பெண்களுக்கு பீட்டா வேண்டுகோள்

  மேலும் பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட 58 பேர் காயமடைந்தனர். குர்திஸ்தானின் சுலைமானியாவிற்கு அருகில் உள்ள ஈரானிய குர்துகளின் 10 தளங்களை குறி வைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈராக்கிய குர்திஷ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதலுக்கு ஈரானின் புரட்சிகர காவல்படை பொறுப்பெற்றுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உபகரணங்களுக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை  என அமெரிக்கா அறிவித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Iran, Iraq, USA