Home /News /international /

13 மாத குழந்தையுடன் வந்து வானிலை குறித்த தகவல்களை வழங்கிய ஆராய்ச்சியாளர்!

13 மாத குழந்தையுடன் வந்து வானிலை குறித்த தகவல்களை வழங்கிய ஆராய்ச்சியாளர்!

ஆராய்ச்சியாளர்

ஆராய்ச்சியாளர்

அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரில் உள்ள வானிலை பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், திடீரென தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து வானிலை குறித்த தகவல்களை வழங்கியதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில், வீட்டில் இருந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்கு உரிய விஷயம் என பலரும் கருதுகின்றனர். இருப்பினும், பச்சிளம் குழந்தைகளை உடையவர்கள் இப்படி கருத முடியாது.

ஆனால், அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரில் உள்ள வானிலை பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், திடீரென தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து வானிலை குறித்த தகவல்களை வழங்கியதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ரெபேக்கா ஷூட் என்ற பெண் வானிலை ஆராய்ச்சியாளர் பிரசவ கால விடுப்பு எடுத்திருந்தார். இந்நிலையில், விடுமுறை முடிந்த பிறகு, வீட்டில் உள்ள ஸ்டுடியோவில் இருந்தே வானிலை ஆய்வு தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார். வானிலை ஆய்வு தகவல்களை வழங்கும்போது தனது 13 மாத பெண் குழந்தை பியோனாவை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார் அவர். அந்த தருணம் இப்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள் : 16 விநாடிகள் மாஸ்க்கை கழட்டியதற்கு ரூ.2 லட்சம் அபராதம்... எங்கே தெரியுமா?

இதுகுறித்து ரெபேக்கா கூறுகையில், “நான் எனது வானிலை அறிவிப்பு நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அந்த சமயம் பார்த்து, எனது குழந்தை எழுந்துவிட்டது. இதனால், கையில் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு தயாரானேன். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், அதை பார்த்து, என்ன குழந்தை எதுவும் வானிலை அறிக்கை சொல்லப் போகிறதா? என்று கேட்டார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

 



 

இந்த நிகழ்வு முன்கூட்டியே திட்டமிடப்பட ஒன்று அல்ல என்றும், நேரலை நிகழ்ச்சிக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக குழந்தை நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். கையில் குழந்தையுடன் வானிலை வாசிப்பது குறித்து பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ டிவிட்டரில் வைரல் ஆனது. ஆனால், இது இயல்புக்கு மாறான ஒன்று போல இருப்பதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : வாவ்...இவ்ளோ அழகா நம்ம பூமி! ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து பூமியை புகைப்படம் எடுத்த விண்வெளி வீரர்!

அதேசமயம், எப்போதாவது நிகழும் இதுபோன்ற நெகிழ்ச்சிகரமான சம்பவங்களை, எந்தவித விமர்சனமும் இல்லாமல் ரசிக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, ஒரு வானிலை ஆராய்ச்சியாளர் சார்பில் நிகழ்ச்சியில் காக்கப்பட வேண்டிய பொறுப்புணர்வில் இருந்து தாம் தவறி இருப்பதை ரெபேக்கா ஒப்புக் கொண்டார்.

 



 

இருப்பினும், இதுதான் எதார்த்த வாழ்க்கை என்பதை உணர்ந்த பிறகு, அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து ரெபேக்கா வெளியே வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பச்சிளம் குழந்தையை வைத்துக் கொண்டு, வீட்டில் இருந்தே பணிபுரியும் பலர் இருக்கின்றனர். குழந்தை சில சமயம் அழுகிறது. சில சமயம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.

ஆகவே, இதுபோன்ற சமயங்களில் குழந்தை பராமரிப்பு என்பது சவாலான விஷயம் தான். இருப்பினும், ஒரு தாய்க்கு உரிய கடமைகளில் இருந்து விலக முடியாது’’ என்றார் அவர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: America, Meteorological dept, US

அடுத்த செய்தி